உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

91

எழுத்தின் அடிப்பகுதி கீழ்நோக்கி வளைந்திருப்பதே இது றை என்பதை ஐயமில்லாமல் தெரிவிக்கின்றது. ஆகவே, முன் கூறியவர் எல்லோரும் இது டை என்று கொண்டு வெள்ளடை என்று படித்தது தவறு. திரு.ஐ. மகாதேவன் றை என்று கொண்டு வெள்அறை (வெள்ளறை) என்று படித்ததே சரியாகும். வெள்ளறை என்பது ஓர் ஊரின் பெயர். அந்த ஊர் கற்பாறைகள் உள்ள இடத்தில் இருந்திருக்க வேண்டும். (அறை என்றால் பாறை. வெள் அறை - வெள்ளைப் பாறை) அரிட்டாபட்டி 7

அரிட்டா பட்டி கிராமத்தின் வடமேற்கே அரை மைல் தொலைவில் கழிஞ்சமலை என்னும் பாறைக் குன்று இருக்கிறது. இந்தக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகையின் வாயில் மேற்பாறையில் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இதை டாக்டர் கே.வி. இராமனும், திரு.ஒய். சுப்பராயலும் அண்மையில் கண்டுபிடித்தனர்.6

108

பா

SE

இருபத்தைந்து எழுத்துள்ள இந்தக் கல்வெட்டு ஒரு வரியாக எழுதப்பட்டுள்ளது: இந்த எழுத்தின் வரிவடிவம் கீழே தரப்படுகிறது; இந்த எழுத்துக்கள் கண்ணால் பார்த்துக் கையால் வரையப்பட்டவை (மையொற்றுப்படி அன்று) ஆகவே இதில் ஒரு சில தவறுகள் இருக்கவுங்கூடும்.

இதன் வாசகத்தை இவ்வாறு படித்துள்ளனர்:

'நெல்வெளி இய் சழிவன் அதனன் வொளியன் மு ஸ கை

கொடுவன்’