உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

நெல்வெளி வழிவன் (செழியன்) அதனன் ஒளியன் (அல்லது வளியன்) முஸகை கொடுவன். கொடுவன் என்பதன் பொருள் கொடுத்தவன் என்றும், கொத்துவித்தவன் என்றும் பொருள்படும். பாண்டியரின் கீழ் தலைவனாக இருந்த நெல்வெளிசெழியன் அதனன் ஒளியன் (அல்லது வளியன்) முஸகையைச் செய்து கொடுத்தான் என்பது கருத்து.

இவர்கள் படித்துள்ளதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக் கிறது. நெல்வெளி என்பதை நெல்வேலி என்றும் அதனன் என்பதை ஆதன் என்றும் ஒளியன் அல்லது வளியன் என்பதை வெளியன் என்றும் மாற்றி, நெல்வேலி சழிவன் ஆதன் வெளியன் முஸகை கொடுவன் என்று படிப்பது சரி என்று தெரிகிறது. இதற்கு விளக்கம் வருமாறு:

1. நெல்வெளி இய் பிராமி வெ எழுத்தை வே என்றும் படிக்கலாம். பிராமி ளி க்கும் லி க்கும் வேற்றுமைதான் உண்டு. லியின் வலப்புறத்தின் பக்கத்தில் கீழே வளைவான சிறு கோடு இட்டால் O யாகும். அக் கோடு இடாவிட்டால் லியாகும். மேல் காட்டிய எழுத்தில் ளி என்று எழுதப்பட்டுள்ளது. பார்த்து எழுதப்பட்டதாகையால் இதில் தவறும் இருக்கலாம். இந்த எழுத்தை லி என்றே கொள்வோம். னென்றால் நெல்வேலி என்று ஊர் இருக்கிறது. நெல்வெளி என்று ஊர் இருந்ததாக இதுவரையில் தெரியவில்லை. ஆகையால் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நெல்வேலி என்றே கொள்வோம். நெல்வேலி என்பது நெல்வெலிஇய் என்று எழுதப்பட்டுள்ளது. இகர ஈற்றுச் சொற்களில் இகரத்தையும் யகர மெய்யையும் இட்டு இவ்வாறு எழுதுவது அக்காலத்து வழக்கம். ஆகவே, நெல்வேலிஇய் என்பதை நெல்வேலி என்றே படிக்க வேண்டும்.

2. சழிவன். இதன் சரியான உருவம் செழியன் என்பதாகும். செழியன் என்பது பேச்சு வழக்கில் சழிவன் என்று மருவி வழங்கிற்றுப் போலும். செழியன் என்பது பாண்டியரின் பொதுப் பெயர்.

3. அதனன். இதில் இரண்டு றன்னகரங்கள் சேர்த்து எழுதப் பட்டுள்ளன. அதன் என்பது இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அதன் என்பது ஆதன். பிராமி அகர எழுத்தின் மத்தியில் வலப்பக்கமாகச் சிறு கோடு அமைத்தால் ஆகாரம் ஆகும். அமைக்க வேண்டிய அந்தக் கோட்டை அமைக்காதபடியால் அதன் என்று இருக்கிறது, இது