உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

4. “பங்களநாட்டு வடக்கில் வன்முகைநாட்டு

உய்யக்கொண்டான் சோழபுரம்"

S.I.I.Vol.VIII.No.8

மேலே காட்டப்பட்ட சாசனப்பகுதிகளிலிருந்து பங்கள நாடு, சயங்கொண்ட சோழமண்டலம் செயங்கொண்ட மண்டலம் என்பது தொண்டை மண்டலம். தொண்டை மண்டலத்துக்குப் பழைய பெயர் அருவா நாடு என்பது. சயங்கொண்ட சோழமண்டலம், தொண்டை மண்டலம், அருவா நாடு என்னும் பெயருடைய நாடு தமிழகத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் (தமிழகத்தின் வட எல்லையில்) சேர்ந்ததுதான் பங்களநாடு என்பது இந்தச் சாசனங் களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பங்களநாடு சில உட் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதும் அப்பிரிவுகளில் இரண்டு வன்முகை நாடு, முகைநாடு என்பன என்பதும் இந்தச் சாசனங் களினாலே தெரிகின்றன.

இந்தச் சான்றுகளைக் கொண்டு, சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற பங்களர் என்பவர் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்திருந்த பங்கள நாட்டினர் என்பது நன்கு விளங்குகிறது. பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள் கருதியதுபோல, பங்களர் என்னும் சொல் பங்காளரை (வங்காளரை)ச் சுட்டவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஒலி ஒப்புமையைக் கொண்டு, பங்களரும் பங்களாரும் ஒருவரே என்றும் அவர்கள் வங்களா தேசத்தவர் என்றும் இவர்கள் கொண்ட முடிவு தவறாகிறது. இந்தத் தவறான முடிவு காரணமாக, சிலப்பதிகாரம் பிற்பட்ட நூல் என்று இவர்கள் கூறியதும் பிழைபட்ட முடிவாகிறது.

திரு. வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கியங்களைப் பயின்றவர்; சாசனங்களையும் சரித்திரங்களையும் பயின்றவர் அல்லர் என்பது அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து தெரிகிறது. இவர், தம் நண்பரான நீலகண்ட சாஸ்திரியார் ஆராயாமல் கூறிய கருத்தை உண்மையெனக் கருதிக்கொண்டு, தமிழ்நாட்டு வடநாட்டுப் பங்காளர் என்று எழுதிவிட்டார். ஹேமசந்திர ராய் சவுத்திரி அவர்கள் வங்களா நாட்டவர்; தமிழ்மொழி அறியாதவர். ஆகவே, அவர் மேலே காட்டிய தமிழ்ச் சாசனங்களைப் படித்திருக்கமாட்டார். ஆகவே, அவர் தமிழ்நாட்டில் ஒரு பங்களநாடு இருந்தது என்பதை அறிந்திருக்க