உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

103

மாட்டார். ஆனால், நீலகண்ட சாஸ்திரியும், இராமச்சந்திர தீட்சிதரும் தமிழ்நாட்டவர்; தமிழ்மொழியறிந்தவர். அன்றியும், சரித்திரத் துறையில் பேராசிரியர்கள். ஆகையினால் நாம் மேலே காட்டிய சாசனப் பகுதிகளைப் படித்திருக்க வேண்டியவர்கள். ஆனால், இச்சாசனங்களை இவர்கள் படித்திருப்பதாகத் தோன்றவில்லை. படித்திருப்பார் களானால், பங்களரை வங்களார் என்று எழுதியிருக்க மாட்டார்கள். சரித்திரத் துறையிலே பயின்று அத்துறையிலே ஆசிரியர் களாக இருந்த இவர்கள் தென் இந்தியச் சாசனங்களைப் பயின்றிருக்க கடமைப்பட்டவர்கள். இவர்கள் தமிழ்ச் சாசனத்தில் கூறப்படுகிற பங்களரைப் பற்றி அறியாம லிருப்பது வியப்பாக இருக்கிறது. அறியாம லிருந்தாலும் தவறில்லை. வெறும் சொல் ஒற்றுமையையும் ஒலி ஒற்றுமையையும் மட்டும் வைத்துக்கொண்டு பங்களரும் வங்களரும் ஒருவரே என்றும், வங்க மக்களுக்குப் பங்காளர் என்னும் பெயர் வழங்கியது பிற்காலத்தில் ஆகையால், பங்களர் என்னும் சொல்லை ஆள்கிற சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் என்றும் எழுதியது எவ்வளவு தவறானது! இவர்கள் எழுதியதை வேத வாக்காகக் கருதி வையாபுரிப்பிள்ளை போன்றவர்களும், சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் என்று எழுதியது எவ்வளவு பிழையானது!

பங்களர் என்பது பங்காளரை (வங்காளரைக்) குறிப்பதாக இருந்தால் அப்பெயர் பிற்காலத்து வழக்குச் சொல் என்று இவர்கள் கூறியதில் தவறில்லை. ஆனால், பங்களர் என்னும் சொல் வங்காளரைக் குறிக்கவில்லை, தமிழரில் ஒரு பகுதியாரைக் குறிக்கிறது என்பதற்குச் சாசனச் சான்று காட்டி நிறுவப்பட்டது. கொங்கணர், கங்கர், கட்டியர் முதலிய பெயர்களைப் போலவே பங்களர் என்னும் பெயரும் சங்ககாலம் முதல் தொன்று தொட்டு உள்ள பெயராகும். பங்களர் என்னும் பெயர் பிற்காலத்து வழக்குச் சொல் அன்று. எனவே, இவர்கள் தவறாகக் கூறுவதுபோல, சிலப்பதிகாரம் பிற்காலத்து நூலன்று; சங்க காலத்து நூலேயாகும். அதாவது, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.

பிள்ளையும் சாஸ்திரியும் தீட்சிதரும், சவுத்திரியும் பல்கலைக் கழகத்து அறிஞர்களாக இருந்தாலும், இவ் வாராய்ச்சியில் பிழைபட்டுத் தவறான முடிவைக் கூறிய படியால் இவர்கள் முடிவு கொள்ளத்தக்க தன்று; தள்ளத்தக்க தாகும். பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள்