உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மாநாய்கனும் மாசாத்துவானும்*

உலகப் புகழ்பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினத்திலே கோவலனும் கண்ணகியும் பிறந்து வாழ்ந்தார்கள். அவர்களுடைய பெற்றோர் புகார்ப்பட்டினத்தில் பெரு வாணிகராகத் திகழ்ந்தார்கள். இவர்களைத் தவிர வேறு பல வாணிகர் புகார்ப்பட்டினத்தில் வாணிகஞ் செய்திருந் தார்கள். அவர்களில் சிலர் எட்டி என்னும் சிறப்புப் பெயர் பெற்றிருந் தார்கள். அக்காலத்தில் வாணிகத்தினால் பெரும் பொருள் ஈட்டிச் செல்வங்கொழித்தவருக்கு 'எட்டி' என்னும் பட்டங் கொடுத்துத் தமிழ் வேந்தர் அவர்களைச் சிறப்புச் செய்தார்கள். எட்டிப் பட்டம் வழங்கும் போது அரசன் ‘எட்டிப்பூ’ என்னும் பொற் வூவை அளிப்பது வழக்கம். எட்டிப் பட்டம் பெற்ற ஒரு வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந் ததை மணிமேகலை கூறுகிறது. எட்டிகுமரன் ஆசனத்தில் அமர்ந்து யாழ் வாசித்துக்கொண்டிருந்ததை மணிமேகலை இவ்வாறு கூறுகிறது. "மகர யாழின் வான்கோடு தழீஇ

வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டி குமரன் இருந்தோன்.

(மணி: பளிக்கறைபுக்க காதை. 56-58)

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த இன்னொரு வாணிகன், தரும தத்தன் என்னும் பெயருடையவன், பாண்டி நாட்டு மதுரைக்குச் சென்று வாணிபஞ் செய்து பெரும் பொருள் ஈட்டினான். அப்போது பாண்டிய அரசன் அவனுக்கு ‘எட்டி’ப் பட்டமும் எட்டிப்பூவும் வழங்கிச் சிறப்புச் செய்தான் என்பதை மணிமேகலை காவியமே கூறுகிறது.

“வாணிக மரபின் வருபொருள் ஈட்டி

நீணிதிச் செல்வனாய் நீணில வேந்தனின் எட்டிப் பூப்பெற்று இருமுப் பதிற்றியாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்.

99

(மணி: சிறைசெய்காதை. 111-114)

காவிரிப்பூம்பட்டினத்தில் கப்பல் வாணிகனாக இருந்த சாதுவன் என்பவன் தன்னுடைய செல்வத்தை யெல்லாம் சூதாட்டத்திலும் * செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 46: 1971.