உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

அல்லவா? அவர் பெயரையும் நூலின் பெயரையும் ஏன் உரை யாசிரியர்களும் மற்றவர்களும் கூறவில்லை? அப்படி ஒரு நூலும் ஆசிரியரும் இல்லாதபடியினாலே அவர்கள் கூறவில்லை. மேற்கோள் காட்டப்பட்ட இச் செய்யுள்கள் தனிப்பாடல்கள் என்பது விளங்கின்றது.

பத்தினிச் செய்யுள் என்பது உண்மையில், சங்க காலத்துக்குப் பிற்காலத்திலே இருந்த யாரோ ஒரு பத்தினிப் பெண் பாடிய ஒரு தனிப் பாடல் என்று தோன்றுகிறது. பத்தினிச் செய்யுளைக் கண்ணகியார் பாடிய செய்யுள் என்று தவறாகக் கருதிக்கொண்ட இராகவையங் காரும், இச் செய்யுளைத் தனிச் செய்யுளாகக் கருதினாரே தவிர, ஒரு நூலில் இருந்து எடுத்த செய்யுள் என்று கருதவில்லை. எனவே, கண்ணகி கதையைக் கூறுகிற வெசண்பா நூலொன்று சிலப்பதிகாரம் இயற்றுவதற்கு முன்பு இருந்ததென்று சாஸ்திரியாரும் பிள்ளையும் யூகிப்பது ஆதாரம் அற்ற கட்டுக்கதை என விடுக.

ஒரே விருத்தப் பாவினால் இராமாயணக் கதை முழுவதையும் அமைத்து "ஏக விருத்த இராமாயணம்” என்னும் ஒரு விருத்தப்பா தனிப்பாடற்றிரட்டில் உண்டு. அதுபோல, சிலப்பதிகாரக் கதையை ஒரு வெண்பாவினால் அமைத்துப் பிற்காலத்தில் இருந்த யாரோ ஒரு புலவர் பாடியதுதான், தெய்வச் சிலையார் மேற்கோள் காட்டிய வெண்பா. ஏகவிருத்த இராமாயணம் ஒரு பழைய இராமாயண நூல் என்றும், அந்நூலைப் பார்த்துத்தான் கம்பன் இராமாயணத்தைப் பாடினான் என்றும் யாரேனும் ஒரு அறிஞர் புனைந்துரைப்பாரானால் எப்படியோ, அப்படித்தான் இருக்கிறது, "காதலியைக் கொண்டு” என்னும் வெண்பாவைப் பார்த்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் பாடினார் என்று சாஸ்திரியாரும் பிள்ளையும் கூறுவது. தக்க சான்று காட்டாமல், இப்படியிருக்கலாம், அப்படி இருக்கக்கூடும் என்று யூகங் களையும் யோசனைகளையும் சொல்லுவதுதான் ஆராய்ச்சியோ? பொறுப்புள்ள இடத்தில் இருந்துகொண்டு வாய் புளித்தா, மாங்காய் புளித்தா என்பதுபோல், எதையும் கூறிவிட்டால் அறிஞர் உலகம் ஏற்றுக்கொள்ளுமா?

மேலும் இவ்விரு அறிஞர்களும் எழுதுகிறார்கள்:- “ஆரிடப் போலி அல்லது ஆரிடவர்க்கம் என்று பத்தினிச் செய்யுள் குறிப்பிடப் படுவதால், இந்நூல் (இவர்கள் யூகமாகக் கற்பித்துக்கொண்ட நூல்) சிலப்பதிகாரத்துக்கு முற்பட்டதாதல் வேண்டும். எனவே, இக்