உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருமாவுண்ணி கண்ணகியா?*

நற்றிணை நானூறு என்னும் நூலிலே, 216-ஆம் செய்யுளிலே, மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் திருமாவுண்ணி என்னும் பெண்மணியின் செய்தியைக் கூறுகிறார். வேங்கை, மரத்தின் மேலே பரண் அமைத்துக்கொண்டு, தினைப் புனத்தைக் காவல் காத்து வந்த திருமாவுண்ணி, ஏதிலாளன் ஒருத்தன் அவளைக் காதல் மணஞ் செய்துபிறகு கைவிட்டபடியால் கவலையினாலே வருத்த முற்றுத் தனது ஒரு முலையை அறுத்தாள் என்று கூறப்படுகிறாள். திருமா வுண்ணியின் இச்செய்தியைக் கூறுகிற நற்றிணைச் செய்யுள் இது: "எரிமருள் வேங்கைக்

66

கடவுள் காக்கும்

குருகார் கழனியின்

இதணத் தாங்கண்

ஏதி லாளன்

க கவலை கவற்ற

ஒருமுலை அறுத்த

திருமா வுண்ணிக்

கேட்டோ ரனையார்

ஆயினும்

வேட்டோ ரல்லது பிறரின் னாரே

இதன் பொருள்: 'குருவிகள் ஆரவாரிக்கும் வயலிலே தெய்வத் தன்மை வாய்ந்த தீச்சுடர் போன்ற பூவையுடைய வேங்கை மரத்திலே கட்டிய கட்டுப் பரண் அருகிலே, அயலான் ஒருவன் செய்த கவலை யினாலே வருத்த மடைந்து ஒரு கொங்கையை அறுத்த திருமா வுண்ணிபற்றிக் கேட்டவர், அவள் துன்பத்தை அறிந்தவராயினும், அவளிடம் அன்பு உள்ளவர் மாத்திரம் வருந்துவார்களே யல்லாமல் எல்லோரும் வருத்தமடைய மாட்டார்கள்' என்பது.

  • கலைக்கதிர். 9:11; 1959.