உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

மகளிர் தினைப்புனத்தைக் காவல் காக்கும்போது, காளைப் பருவம் உள்ள வாலிபர்கள் வேட்டைக்கு வந்தவர்போலச் சந்தர்ப்பம் உண்டாக்கிக்கொண்டு, அவர்களிடம் வந்து 'நான் அம்பு எய்து துரத்திய மான் இவ்விடம் வந்ததா? நான் அம்பு எய்த யானை இந்தப் பக்கமாக வந்ததா? என்று அப்பெண்களைக் கேட்டு, அவர்களோடு வார்த்தை யாட வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு தங்கள் காதலில் கருத்துச் செலுத்து வார்கள். வேங்கை மரத்தின்மேல் பரண் கட்டிக்கொண்டு அதிலிருந்து பெண் மகளிர் தினை வயலைக் காவல் புரிந்த செய்தியைச் சங்கச் செய்யுள்களில் காணலாம்.

“காரரும் பவிழ்ந்த

கனிவாய் வேங்கைப்

பாவமை இதணம்

ஏறிப் பாசினம்

வணர்குரற் சிறுதினை

கடியப்

புணர்வது கொல்லோ

நாளையும் நமக்கே" (நற்றிணை 373)

களிறு அணந்தெய்தாக்

கன்முகை இதணத்துச்

சிறுதினைப் படுகிளி

யெம்மோ டோப்பி”

(அகம். 308)

66

"திறத்திறம் பகர்ந்து

சேணேங்கு இதணத்துக்

குறத்தியர் பாடிய

குறிஞ்சிப் பாணியும்

(சிலம்பு. நீர்ப்படைக் காதை 223-224)

இவ்வாறு குறமகளிர் வேங்கை மரத்தும் பரணில் அமர்ந்து காவல் காக்கும் போது காளைப் பருவம் உள்ள வாலிபர் அவரிடம் காதல் நிகழ்த்துவர் என்று கூறினோம். இக்காவியற் காதலில் மனம் ஒத்த காதலர்கள், பலர் அறிய மணம் புரிந்து வாழ்வார்கள். இக்காதல் நிகழ்ச்சிகளில் சில சமயங்களில் தவறு உண்டாகித் துன்பமாக முடிவதும் உண்டு.