உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

159

கதையைக் கண்ணகி கதையுடன் பொருத்துவது ஒரு சிறிதும் பொருந்தாது.

வையாபுரிப் பிள்ளையும் நீலகண்ட சாஸ்திரியும் சிலப்பதிகாரம் கட்டுக்கதை என்னும் ஒரு கருத்தை யூகித்துக் கொண்டு, அக் கருத்துக்கு ஆதாரங்களைத் தேடுகிறார்கள். இவர்களுக்கு மாறுபட்ட ஆதாரங் களையெல்லாம் காட்டாமல் மறைத்துவிடுகிறார்கள். தங்கள் கருத்துக்குச் சாதகமாக இருப்பதாகக் கருதிக்கொண்டு இவர்கள் கூறும் சான்றுக ளெல்லாம்; இவர்கள் கருத்துக்கு முரண்படுகின்றன. இவர்களின் ஆராய்ச்சி, உண்மை காணும் நோக்கமுடையதாக இல்லை.

1.

2.

அடிக்குறிப்புகள்

நாச்சியார் திருமொழி 1 5, V7, VIII 7.

திருமாவுண்ணியின் கதையினைச் சென்ற இதழில் காண்க.