உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

161

நிற்காமலும் இருக்காமலும் இரவுபகல் பாராமலும் திக்குத்திசை தெரியாமல் எங்குப் போகிறார் என்றறியாமல் கண்ணகி யார் நெடுக நடந்தார். அவர் நடந்த இடங்கள் மேடு பள்ளங்களும் காடுகளும் குன்றுகளுமாக இருந்தன. ஓய்வு உறக்கம் இல்லாமல் பதினான்கு நாள்களாகத் தொடர்ந்து வழி நடந்தார். (மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர் தம்முடைய இறுதிக் காலத்தில் வடக்கு நோக்கி நீள் யாத்திரை செய்தார்கள் என்று கூறுவதை இங்கே நினைவு கொள்ளலாம்.

பதினான்கு நாள்களாக ஊணுறக்க மின்றி ஓயாமல் நடந்த கண்ணகியாரின் உடம்பு இளைத்து வாடி வதங்கிக் கண் பஞ்சடைந் திருக்கவேண்டும். பதினைந்தாம் நாள் அவர் ஒரு குன்றின்மேல் நடந்த போது மேலும் அடியெடுத்து வைக்க முடியாமல் சோர்ந்து போனார். இளைப்பும் களைப்பும் மேலிட்டன. அருகிலிருந்த வேங்கை மரத்தின் கீழே அமர்ந்தார். அந்தக் குன்றின் சாரலிலே குறிச்சியில் வாழ்ந்த குறச் சிறுமிகள், புதியவள் ஒருத்தி அங்கு வந்திருப்பதைக் கண்டு ஓடிவந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர். ‘அம்மையீர்! நீங்கள்யார்? எங்கிருந்து வருகிறீர்? எங்குச் செல்கிறீர்? என்று குறச்சிறுமியர் வினவினார்கள். கண்ணகியாரால் பேச முடியவில்லை. நாக்குழறத் தட்டுத் தடுமாறிப் பேசினார். தம்முடைய கணவன் மதுரையில் கொல்லப்பட்டதும், தாம் மதுரையை எரித்த பிறகு வழிநடந்து வந்ததும் ஆகிய செய்தியைச் சுருக்கமாகக் கூறினார். அவரால் மேலும் பேச முடியவில்லை. அப்போது அவருடைய உயிர் பிரிந்தது. கண்ணகியார் தெய்வம் ஆனார், அஃதாவது இறந்துவிட்டார்.

66

'அவல என்னாள் அவலித் திழிதலின்மீசைய என்னாள் மிசைவைத் தேறலின்

கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு

அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்

நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர் ‘தீத்தொழி லாட்டியேன் யானென்றேங்கி எழுநாள் இரட்டி எல்லை சென்றபின்”

(கட்டுரை காதை, 186-193)