உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

165

وو

“வர்ஷ நாடு என்று குறிப்பிடப்பட்ட கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்துகிடக்கிறது. இப்பள்ளதாக்கைச் சூழ்ந்து முப் புறமும் சுவர் வைத்தது போல் சுருளிமலைத் தொடரும் பழனி மலைத் தொடரும் இணைந்து நிற்கின்றன.” “சுருளிமலைதான் நெடுவேள் குன்றம் நெடுவேள் குன்றம் என்ற பெயர், மலையிலிருந்து சுருண்டு விழும் அருவியின் பெயரால் சுருளிமலை என்று மாறியிருக்கிறது. 'வர்ஷ நாடு என்னும் மலையடிவாரப் பகுதிகளை ஆராய்ந்து பார்த்தபோது கீழ்க் கூடலூருக்குத் தெற்கே உள்ள பழைய கோயிலில் ஒரு குத்துக் கல்லைக் கண்டேன். மங்கல தேவி அம்மன் கோவிலுக்குச் சேர மன்னர் ஒருவர் தர்மமாக அளித்த நிலங்களைப் பற்றிய செய்தி அதில் இருந்தது. கி.பி. 14ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டாகும் அது.

66

وو

“மிகப் பழைமையோடு கூடியதும் பலிபீடத்துடன் இருப்பது மாகிய மூன்றாவது கோயிலை அடைந்தேன். உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில் ஒரேகல்லில் இரண்டு கைகளுடன் இடக் காலைப் பீடத்தில் மடக்கி, வலக்காலை ஊன்றிய பாங்கில் இருந்த ஒரு பெண்சிலை, இடிபாடுகளுக்கிடையே காணப்பட்டது. அதன் தலையில் கிரீடம் இல்லை. கொண்டையில் விரிந்த கூந்தல்போல இருபுறமும் அழகு செய்யப்பட்டிருந்தது. இடப்புற மார்பு சிறியதாக இருந்தது. இதுவே செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை.’” 'சிலப்பதிகாரத்தில் குன்றக்குரவை என்னும் காதையுள் அருவியினையுடைய நெடுவேள் நிறத்தின்மீது, வேங்கை மரத்து நல்ல நிழலின்கண்ணே (கண்ணகியை) ஒப்பற்ற தெய்வமாகப் பண்ணிக் கொள்ளுமின் என்று கூறுவதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதி இதுவே யாகும்.

66

“பின்னர், பேரியாற்றின் (பெரியாறு) கரையின் மலைவளம் காண வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் மலைவாழ் வேடர்கள் (குறவர்கள்) கண்ணகிஇறந்த இடம் இதுவென்று குறித்துக் காட்டிய இடத்திலேயே அம்மன்னன் பத்தினிக் கோட்டம் அமைத்துள்ளான்.... எனவே இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் குறிப்பிடும் நெடுவேள் குன்றமும் பத்தினிக் கோட்டமும் இதுதான். சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலையும் இதுவே.’

பேராசிரியர் சி. கேவிந்தராசனார் எழுதியுள்ள கட்டுரையின் முக்கியமான சாரம் இவை. இதில் நான்கு கருத்துக் களைக் கூறுகிறார்.