உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

அவை : 1. நெடுவேள் குன்று என்று சிலப்பதிகாரம் கூறுவது, பாண்டி நாட்டில் கம்பம் பள்ளத்தாக்கு அடுத்துள்ள சுருளிமலை. 2. நெடுவேள் குன்று என்று பெயர் பெற்றிருந்த சுருளிமலையின் மேல் கண்ணகியார் உயிர் விட்டார். 3. இந்த இடத்தில்தான் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்ான். 4. இப்போது இங்குக் காணப்படுகிற சிலை யுருவம் செங்குட்டுவன் அமைத்த கண்ணகியின் சிலையுருவமாகும்.

நெடுவேள் குன்றம் என்பதற்கு இவ்வாறு வெவ்வேறு மூன்று ங்கள் கூறப்படுகின்றன. கண்ணகியார் ஏதோ ஓர் இடத்தில் மட்டும் உயிர்விட்டிருக்க வேண்டுமே யல்லாமல் மூன்று இடங்களில் உயிர் விட்டிருக்க முடியாது. ஆகவே, கண்ணகியார், இந்த மூன்று குன்று களில் ஏதேனும் ஒரு குன்றின்மேல் உயிர் விட்டிருக்கவேண்டும். அப்படியானால் அந்தக் குன்று எது? திரு. கோவிந்தராசனார் கூறுவது போல சுருளிமலைக் குன்றுதானா, அல்லது உரையாசிரியர்கள் கூறுகிற குன்றுகளா? அல்லது இம்மூன்று குன்றுகளும் அல்லாத வேறு குன்றா? இவற்றை ஆராய்வோம்.

நெடுவேள் குன்றம்

நெடுவேள் ஆகிய முருகன் தமிழரின் தொன்மையான கடவுள். முருகன் சிறப்பாக மலைகளிலே எழுந்தருளியிருக்கிறான் என்பது தமிழர் நம்பிக்கை. குன்றுகள் மலைகள் தோறும் அவன் எழுந்தருளி யிருக்கிறான். இந்த முறையிலேதான் இளங்கோ வடிகள் நெடுவேள் குன்றம் ஒன்றைக் கூறினார். அந்தக் குன்றம் எங்கிருந்தது என்பதைத் திட்டவட்டமாக அவர் கூறவில்லை. முருகன் இருந்த ஒரு குன்றின் மேலே கண்ணகியார் உயிர் விட்டார். அந்தக் காலத்திலே குன்றுகளிலும் மலைச் சரிவுகளிலும் குறவர் (இக்ாலத்து நாடோடிக் குறவர் அல்லர்) வாழ்ந்து வந்தார்கள். கண்ணகியார் உயிர்விட்ட குன்றம் எது? இளங்கோ அடிகள் அந்தக் குன்றம் இருந்த இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக் கூறவில்லை. 'நெடுவேள் குன்றம்' என்று கூறுகிறார். முருகனுக்குக் கோயில் உள்ள குன்றுகள் எல்லாம் நெடுவேள் குன்றுதான். ஆகவே கண்ணகியார் உயிர் நீத்த குன்று எது? என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு விடை என்ன?