உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

"கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி,

குடவர் கோவே! நின்னாடு புகுந்து

வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்

(நீர்ப்படைக் காதை, 63-65)

என்று கூறினான். கண்ணகியார் சேர நாட்டுக்குச் சென்றார் என்பதை இக்குறிப்பு மூலமாக இளங்கோ அடிகள் கூறுவது அறிக.

சேரநாட்டுத் தலைநகரான வஞ்சிமா நகரத்தில் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தான். அவ்வமயம் வஞ்சி நகரத்து மகளிர் கண்ணகியின் புகழைப் பாடுவதற்குப் பத்தினிக் கோட்டத்துக்கு வந்தார்கள். வந்தவர்கள் தங்கள் தோழியர்களையும் பத்தினிக் கோட்டத்துக்கு அழைத்தார்கள். அவர்கள்,

“செங்கோல் வளைய

உயிர்வாழார் பாண்டியர்என்று

எங்கோ முறைநா

இயம்ப, இத் நாடடைந்த

பைந்தொடிப் பாவையைப்

பாடுதும் வம்மெல்லாம்

பாண்டியன் தன்மகனைப்

பாடுதும் வம்மெல்லாம்”

(வாழ்த்துக் காதை, வஞ்சிமகளிர் சொல்)

6

என்று அழைத்தாக இளங்கோவடிகள் பாடியுள்ளார். 'இந் நாட்டை யடைந்த பைந்தொடி' என்று சேரநாட்டு மகளிர் பெருமிதத்தோடு கூறியபடியால், கண்ணகியார் இறுதியாகச் சென்றது சேரநாடு என்பதும் அந்நாட்டில் ஏதோ ஒரு குன்றின்மேல் அவர் உயிர்நீத்தார் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகின்றன. இவ்வாறு, இளங் கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரத்திலே மூன்று இடங்களிலே கண்ணகியார் சேரநாட்டுக்குச் சென்று உயிர்விட்ட செய்தியை நுட்பமாகக் கூறியுள்ளார்.

மற்றும், சிலப்பதிகாரப் பதிகத்திலும் இந்தக் குறிப்பு காணப்படுகிறது. “சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்

சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்’