உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

169

என்று இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரிடம் கூறியபோது சாத்தனார்,

66

'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக

என்று கூற அடிகள் காவியம் இயற்றினார் என்று பதிகம் கூறுகிறது. இதில், 'முடி கெழு வேந்தர் மூவர்க்கு முரியது' என்பதற்கு அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் 'புகாரினும் மதுரையினும் வஞ்சியினும் நிகழ்தலான் மூவர்க்கு முரியது” என்று உரை கூறுகிறார்கள். கோவலனும் கண்ணகியும் பிறந்து மணந்து வாழ்ந்தது சோழருடைய புகார்ப் பட்டினத்தில்; கோவலன் கொலையுண்டதும் கண்ணகி துனபுற்றதும் பாண்டியருடைய மதுரை மாநகரத்தில்; கண்ணகி உயிர்விட்டது சேரருடைய நாட்டில் பத்தினிக்கோட்டம் பெற்றுப் பரவப் பெற்றதும் சேரருடைய தலை நகரமான வஞ்சிப்பட்டினத்தில். இதி லிருந்தும் கண்ணகியார் உயிர்நீத்தது சேரநாட்டில் என்பது தெரிகிறது.

சேரன் செங்குட்டுவன் ஆட்சிக்காலத்தில் சேரநாட்டு ஆட்சிக் குட்பட்ட ஏதோ ஓரிடத்தில் கண்ணகியார் உயிர்விட்டார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

அரும்பத உரையாசிரியர் கருத்துச் சரியா?

நெடுவேள் குன்று என்பது பற்றிஉரையாசிரியர் கூறியுள்ளதை ஆராய்வோம். பழையஅரும்பதவுரையாசிரியர்.நெடுவேள் குன்று என்பது திருசசெங்கோடு மலை என்று கருதியதை முன்னமே கூறினோம். சிலப்பதிகாரத்தில் இன்னோர் இடத்திலும் இவர் கதையேகூறுகிறார். வாழ்த்துக் காதையிலே செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவுள் நல்லணி காட்டியது என்னுஞ் செய்யுளில் அவர் உயிர்விட்ட ‘வென்வேலான் குன்று' கூறப்படுகிறது.

"வெல்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன் என்னோடும் தோழிமீர்

எல்லீரும் வம்மெல்லாம்

இங்கக் கூறப்படுகிற ‘வென்வேலான் குன்று' என்பதற்கு அரும் பதவுரையாசிரியர் மீண்டும் செங்கோடு என்று உரை எழுதியுள்ளார். ஏன் இவர் செங்கோடு மலையைக் கூறினார். இவர் காலத்தில் திருச்செங்கோடு மலையில் கண்ணகிக்குக் கோயில் இருந்தது. இந்தக்