உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

170

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

கோயில், சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் எடுத்த பத்தினிக் கோட்டத்துக்குச் சென்றுவந்த கொங்கு நாட்டு இளங்கோசரால் அமைக்கப்பட்டது. கொங்கிளங்கோசர் கொங்கு நாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்ததைச் சிலப்பதிகார உரைபெறு கட்டுரை கூறுகிறது. அது கேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழைதொழிலென்றும் மாறாதாயிற்று என்பது அதன் வாசகம். திருச்செங்கோடு மலைமேல் கொங்கிளங்கோசர் கண்ணகிக்குக் கோயில் அமைத்து விழாச் செய்தார்கள் என்பது இதனால் தெரிகிறது. பிற்காலத்திலே திருச்செங்கோடு கண்ணகி கோயில் அர்த்நாரீசுவரர் கோயில் என்று பெயர் மாற்றப்பட்டுச் சிவன் கோயிலாயிற்று. அரும்பத வுரையாசிரியர் இக்கோயிலைக் கண்ணகி கோயில் என்று அறிந் திருந்தபடியால், இந்த மலையில்தான் கண்ணகியார் உயிர் விட்டிருக்க வேண்டும் என்று கருதினார் போலும். ஆகையினால் தான் அவர் நெடுவேள் குன்றம் வென்வேலான் குன்று என்பதற்குத் திருச்செங் கோடு என்று உரை எழுதினார் என்று தோன்றுகிறது. திருச்செங்கோடு மலையில் இப்போதுள்ள அர்த்த நாரீசுவரர் கோயில் பழைய கண்ணகி கோயில் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. (அதுபற்றி விளக்கிக் கூற இஃது இடமன்று) சேரன் செங்குட்டு வன் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாடு சேரர் ஆட்சிக்குட்பட்டிருந்தது உண்மைதான். ஆனால், அரும்பத வுரையாசிரியர் கருதுகிறபடி, கண்ணகியார் உயிர்விட்ட இடம் இந்த மலையன்று. திருச்செங்கோடு மலைமேல் முருகனுக்கும் ஒரு கோயில் உண்டு. ஆனால், கண்ணகியார் உயிர்விட்ட நெடுவேள் குன்றம் வென்வேலான் குன்று இஃது அன்று. அடியார்க்கு நல்லார் கருத்துச் சரியா?

கொடுங்கோளூர் என்று பிற்காலத்தில் பெயர்பெற்றதும் வஞ்சி என்று பழைய பெயரையுடையதுமான சேரநாட்டுத் தலைநகர்க்கு அருகில் செங்குன்று என்னும் குன்றின்மேல் கண்ணகியார் உயிர்விட்டதாக அடியார்க்கு நல்லார் கருதுகிறார். இவர் கூறுகிற செங்குன்று மேற்குக் கடற்கரைக்கு அருகில் இருந்திருக்க வேண்டும். மிகச்சிறியதாகவும் மலைவளம் இல்லாததாகவும் இருக்கவேண்டும். இக்குன்றில் குறவர் வாழ்ந்ததாகவும் இதிலிருந்து பெரியாறு உண்டானதாகவும் தெரிய வில்லை. இந்தக் குன்றின்மேல் கண்ணகி யார் உயிர் விட்டிருக்க வேண்டும் என்று அடியார்க்கு நல்லார் ஊகிக்கிறார். இந்த ஊகத்துக்குக் காரணத்தையும் அவர் கூறுகிறார். “அரசனும் உரிமையும் (செங்குட்டு