உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

நன்கு தொடர்கிறது. குன்றுகளின்மேல் மஞ்சு இருப்பது இல்லை. மேலும் உயரமான மேற்கு தொடர்ச்சி மலைகளில் குன்றக் குறவர் வாழ்ந்தனர்.

செங்குட்டுவன் வழக்கமாக ஆண்டுதோறும் மலையடி வாரத்துக்கு வந்து இளவேனிற் காலத்தைக் கழித்தான் என்பது அவன்மேல் (பதிற்றுப்பத்து) ஐந்தாம் பத்துப் பாடிய பரணரும் கூறுகிறார். பரணர் செங்குட்டுவனை இவ்வாறு வாழ்ந்துகிறார்.

66

‘நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும்திநீர் விழவில் பொழில்வதி வேனில் பேரெழில் வாழ் மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும் தீம்புனல் ஆயம் ஆடும்

காஞ்சியம் பெருந்துறை மணலினும்பல

(5ஆம் பத்து)

இதன் பழைய உரைகாரர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார். பொழில் வதி வேனில் பேரெழில் வாழ்க்கை - என்றது வேனிற்காலத்து. (அரண்) மனையில் வைகாது பொழில்களிலே வதியும் பெரிய செல்வ அழகை யுடைய இல்வாழ்க்கை என்றவாறு’.

இதனால், அடியார்க்கு நல்லார், செங்குட்டுவன் மலை காணவந்த அன்றே தன்னுடைய நகரத்துக்குத் திரும்பிப்போனான். என்று ஊகிப்பது தவறு என்று தெரிகிறது. செங்குட்டுவன் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், பெரியாறு மலையிலிருந்து தரையில் இழிகிற நீர்வீழ்ச்சிக்கு அருகில் மணல் பரந்த சோலையில் வேனிற் காலம் முழுவதும் தங்குவது வழக்கம் என்பதும் அவ்வாறு வந்து தங்கிய ஓராண்டின்போது குறவர் கண்ணகியார் வந்து உயிர்விட்ட செய்தியைக் கூறினார்கள் என்பதும் தெரிகின்றன. சேரநாட்டுக் கடற்கரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் உள்ள தூரம் ஏறத்தாழ ஐம்பது மைல் தூரந்தான். செங்குட்டுவன் மலைக் குறவர்களிடமிருந்து கண்ணகியின் செய்தியை அறிந்தது மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் பெரியாறு மலையிலிருந்து விழுகிற இடத்தில் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே அடியார்க்கு நல்லார் கருதுவதுபோன்று, கண்ணகியார் மேற்குத் தொடர்ச்சி மலையையுங் கடந்து மேற்கே அரபிக்கடலுக்கு அருகிலே இருந்த ஒரு குன்றின்மேல் உயிர்விட்டிருக்க முடியாது. முன்பின் நெடுந்தூரம் நடந்து பழகாத கண்ணகியார், மதுரையிலிருந்து சேரநாடு சென்று அந்நாட்டின் மேற்குக் கடற்கரை அருகில் பதினான்கு