உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

173

நாளில் சென்றிருக்கமுடியாது. அதிலும் உணவு உறக்கம் இல்லாமல் களைப் படைந்திருந்தவர் அவ்வளவு தூரம் சென்றிருக்க முடியாது. எனவே, அடியார்க்கு நல்லார், கொடுங்கோளூர்க்கு அருகில் செங்குன்று என்னும் குன்றின்மேல் உயிர்விட்டார் என்று ஊகிப்பது ஏற்கத்தக்கது அன்று. கண்ணகி யார்சேரநாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏதோ ஒரு குன்றின் மேல் உயிர் விட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கோவிந்தராசனார் கருத்துச் சரியா?

பாண்டிநாட்டைச் சேர்ந்த சுருளிமலையில் கண்ணகியார் உயிர் விட்டார் என்று கோவிந்தராசனார் கூறுவதும் ஏற்கத்தக்கதன்று. ஏனென்றால், மேலே காட்டினபடி, சேரநாட்டில் கண்ணகியார் உயிர் துறந்தார். பாண்டி நாட்டில் அல்ல. மிகமிகப் பிற்காலத்தில், கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சுருளிமலைப்பகுதி சேர அரசர் ஆட்சிக்கு வந்திருக்கக்கூடும். ஆனால், சிலப்பதிகார நிகழ்ச்சி நடந்த காலத்தில் இப்பகுதி பாண்டியர் ஆட்சியில் இருந்தது. ஆகவே, கண்ணகியார் தெய்வமான இடம் சுருளிமலை வட்டாரமாக இருக்க முடியாது.

செங்குட்டுவன், தன் ஆட்சிக்குரிய தல்லாத இடத்தில் பத்தினிக் கோட்டம் அமைக்கவில்லை. தன் தலைநகரமான வஞ்சி மாநகரத்தில் (கொடுங்கோளூரில்) பத்தினிக் கோட்டம் அமைத்தான். பத்தினிக் கோட்டத்தை மலையின்மேல் அமைக்கவில்லை. கோவலனின் மகளான மணிமேகலை, செங்குட்டுவன் வஞ்சிமாநகரத்தில் அமைத்த பத்தினிக் கோட்டத்துக்கு வந்து கண்ணகியை வணங்கினாள் என்று மணிமேகலை காவியம், வஞ்சிமா நகர்புக்க காதையில் அறிகிறோம். எனவே, செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தது சுருளிமலை அன்று.

மேலும், ஐயமிருந்தால், கோவிந்த ராசனார் சுருளிமலையில் கண்ட கற்சிலைகளை நிலநூல் அறிந்த பேராசிரியர்களுக்கு அனுப்பி அந்தக்கல் இமயமலைக்கல்லா என்று சோதித்துப் பார்த்து உண்மையை அறியலாம். இதுபற்றி அதிக விளக்கம் தேவை இல்லை. முடிவு என்ன?

மேற்குத்தொடர்ச்சிமலைகளைச் சேர்ந்த ஒரு குன்றின்மேல் கண்ணகியார் உயிர் விட்டிருகக வேண்டும் என்று கூறினேன். மேற்குத் தொடர்ச்சி மலைகள் சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும்