உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தேவந்தி * கண்ணகியின் தோழி

தேவந்தி என்பவள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த ஒரு பார்ப்பனப் பெண்மணி. இவள் கோவலனின் மனைவியாகிய கண்ணகி யுடன் நெருங்கிய நட்பு உள்ளவள். கண்ணகியுடன் நட்புக் கொண் டிருந்தபடியால் கண்ணகியின் செவிலித்தாயாகிய காவற் பெண்டுக்கும் அவள் மகளாகிய அடித்தோழிக்கும் (கண்ணகியின் பணிவிடைப் பெண்) அறிமுகமானவள். கண்ணகியைப் போலவே தேவந்தியும் தன் கணவனால் கைவிடப்பட்டவள். ஆகையால் தேவந்தி சாத்தன் கோவிலில் சென்று அங்கு வழிபாடு செய்துகொண்டிருந்தாள்.

தேவந்தியைப் பற்றி ஒரு கதை கூறப்பட்டது. பாசண்டச்சாத்தன் என்னும் தெய்வம் பார்ப்பனன் வடிவமாக வந்து இவளை மணஞ் செய்து கொண்டு சில ஆண்டுகள் இவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். பிறகு இவளுக்குத் தன்னுடைய உண்மையான வடிவத்தைக் காட்டி 'நீ என் கோவிலில் வந்து என்னை வழிபட்டுக் கொண்டிரு' என்று கூறி மறைந்து போனான். அன்று முதலாக அவள் சாத்தன் கோவிலில் போய்ச் சாத்தனை வழிபட்டுக் கொண்டிருந்தாள் என்பது அந்தக் கதை.

ஒரு நாள் கண்ணகியின் மாளிகைக்குத் தேவந்தி சென்றிருந்த போது கண்ணகி தான் கண்ட தீய கனவைத் தேவந்திக்குத் கூறினாள். அதைக் கேட்ட தேவந்தி, சாத்தன் கோவிலுக்குப் போய்ச் சாத்தனை வழிபட்டால் உன்னுடைய துன்பம் நீங்கும் என்று கூறினாள். இதற்குக் கண்ணகி உடன்படவில்லை. காவிரியாறு கடலுடன் கலக்கிற புகார்த் துறைக்கு அருகில் உள்ள சூரிய குண்டம் சோமகுண்டம் என்னும் ஏரிகளில் முழுகிக் குளித்து அங்குள்ள காமன் கோட்டத்தை வழிபட்டால் உன்னுடைய கணவனை நீ பெறுவாய் என்று தேவந்தி கண்ணகிக்குக் கூறினாள். அதற்கும் கண்ணகி உடன்படவில்லை.

பிறகு கோவலனும் கண்ணகியும் பாண்டி நாட்டு மதுரைக்குச் சென்றதும். அங்குக் கோவலன் கள்வன் என்று பொய்க் குற்றஞ் சாற்றப் * சென்னை இளைஞர் கழக இரவு உயர் நிலைப்பள்ளி பொன் விழா மலர்.

1968.