உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

177

பெற்றுக் கொலையுண்டு இறந்ததும் கண்ணகி பாண்டியன் சபைக்குச் சென்று வழக்குரைத்துத் தன் கணவன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்துக் காட்டித் தன் கணவனைக் கொன்றது அநியாயம் என்று தெளிவு படுத்தியபோது நகரமக்கள் பாண்டியன் அரண்மனையைத் தீயிட்டுக் கொளுத்தியதும், பிறகு கண்ணகி உண்ணா நோன்பிருந்து பதினான்கு நாட்களுக்குப் பிறகு இறந்து போனதும் ஆகிய இச் செய்திகளை யெல்லாம் தேவந்தி அறிந்தாள். சில காலஞ் சென்றபிறகு, சேர மன்னனான செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்ய இருப்பதை அறிந்து தேவந்தி பத்தினிக் கோட்டஞ் சென்றாள். அவளுடன் கண்ணகியின் செவிலித் தாயாகிய காவற் பெண்டும், கண்ணகியின் பணிப் பெண்ணாகிய அடித்தோழியும் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து சென்றார்கள். சென்று பத்தினிக் கோட்ட விழாவில் கலந்து கொண்டார்கள்.

தேவந்தி, வஞ்சிமா நகரத்துக்குச் சென்று பத்தினிக் கோட்டத்துக் கண்ணகி விழாவில் கலந்து கொண்டபோது, இவளுடைய சிரத்தையை யும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் கண்ட அக்கோயிலில்இருந்தவர், இவளுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு என்பதைக் கேட்டார்கள். கண்ணகி காவிரிப்பூம் பட்டினத்தில், வாழ்ந்திருந்தபோது தான் அவளுடைய தோழியாக இருந்ததைத் தேவந்தி அவர்களுக்குத் தெரிவித்தாள். பிறகு கோவிலில் சென்று தெய்வ உருவத்துடன் கல்லாகக் காட்சியளித்த கண்ணகியைக் கண்டு, உயிருள்ள கண்ணகி யாகவே கருதிக்கொண்டு, ‘நீ கண்ட தீய கனவை அன்று எனக்குச் சொன்னபோது அதை’ ஏதோ வெறுங் கனவு என்று கருதினேன், தோழி! மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு உன்னுடைய தாய் மனக் கவலையுடன் இறந்து போனதை நீ அறிவாயா? உன் மாமியும் துயரம் அடைந்து இறந்து போனதையும் நீ அறிவாயா என்று வாய்விட்டுக் கூறி வருந்தினாள்.

தேவந்தி கூறியவைகளை இளங்கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரக் காவியத்தில் அழகான இனிய செய்யுளாக அமைத் திருக்கிறார் அந்தச் செய்யுள்கள் இவை.

66

'முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ

வடபே ரிமய மலையில் பிறந்து

கடுவால் கங்கைப் புனலாடிப் போந்த