உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. மாதவி: காவிரிப்பூம்பட்டினத்தின் கலைச்செல்வி *

இசைக்கலை நாடகக்கலைகளிலே தேர்ந்தவளான மாதவிக்குச் சிலப்பதிகாரக் காவியத்திலே சிறப்பான தனியிடம் உண்டு. மதிப்புள்ள சிறப்பான இடத்தை மாதவி பெற்றது. அவள் செல்வச் சீமானான கோவலனுடைய காமக்கிழத்தி என்பதால் அன்று. இசைக் கலை நாடகக் கலைகளாகிய கவின்கலைகளில் அவள் பெற்றிருந்த முதன்மை இடமே அவளுக்குப் பெருஞ்சிறப்பைத் தந்தது. செல்வமும் நாகரிகமுங் கொழித்து உலகப் புகழ் பெற்றிருந்த அக்காலத்துக் காவிரிப்பூம் பட்டினத்திலே, கணிகையர் குலத்திலே, அதிலும் பெருந்தனம் என்னும் சிறப்புடைய கணிகையர் பிரிவிலே பிறந்த மாதவி, தன்னுடைய குலமுறைப்படி ஐந்து வயது தொடங்கிப் பன்னிரண்டு வயதுவரையில் ஏழு ஆண்டு இசைக்கலை நாகடகக் கலைகளை முறைப்படி நன்கு பயின்றாள். கலைகளைப் பயின்று தேர்ந்த பிறகு, சோழ மன்னனுடைய அவைக்களத்திலே கலைஞர்களின் முன்னிலையிலே அரங்கேறித் தான் கற்ற கலைகளைத் திறம்படக் காட்டினாள்.

அக்காலத்திலிருந்த சோழ மன்னன் சரித்திரப் புகழ்பெற்ற கரிகால் வளவன். மாதவி அரங்கேறியபோது அவ்வரசன் முதுமை யடைந்திருந்தான். வயது முதிர்ந்த கரிகால் வளவன் அவையிலே பன்னிரண்டு வயதினளாகிய மாதவி அரங்கேறினாள். தான் கற்ற இசைக்கலை ஆடற்கலைகளையெல்லாம் இசைபாடியும் ஆடல் நிகழ்த்தியும் சபையோருக்குக் காட்டினாள். அவளுடைய கலைத் திறமையைக் கண்டுமெச்சிய சோழ அரசனும் அக்காலத்து

வழக்கப்படி தலைக்கோலி என்னும் பட்டத்தையும் அதற்கு அடையாளமாகிய தலைக்கோலையும் அவளுக்கு வழங்கினார்கள். தலைக்கோல் என்பது......யான மூங்கிற் கழியில் பொன்னால் பூணு...... அமைத்து நவரத்தினங்கள் இழைபட்டகோல். தலைக்கோலிப் பட்டம் வழங்கியது மட்டுமல்லாமல் அரசன் ஆயிரத்தொ.......... ழஞ்சு நிறையுள்ள பொன் தலைவரிசையாகக் கொடுத்த கலைச்

  • பெங்களூர்த் தமிழ்ச்சங்க சிறப்பு மலர். 1968.