உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

செல்வியாகிய மாதவி அரங்கே ..........பட்டமும் பரிசும் பெற்றதைச் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை மிக நன்றாகக் கூறுகிறது.

அக்காலத்திலே காவிரிப்பூம்பட்டினத்திலே செல்வம் படைத்த சீமானாக இருந்த

இளைஞனாகிய கோவலன். கோவலன் இசை பயின்றவன்; கலைரசிகன். கோவலன் மாதவியின் அழகிலும் இசைப் பாடல்களிலும் ஆடற் கலைகளிலும் ஈடுபட்டு அவளைத் தன்னுடைய காமக் கிழத்தியாக்கிக் கொண்டு அவளுடன் வாழ்ந்து வந்தான்.

சோழ அரசனால் பட்டமும் பரிசும் பெற்றுக் கலைஞர்களின் நன்மதிப்பைப் பெற்ற மாதவி, காவிரிப்பூம்பட்டினத்திலே ஆண்டு தோறும் இருபத்தெட்டு நாட்கள் நடைபெறும் இந்திர விழாவிலே நாள் தோறும் அரங்கே.... இசைபாடியும் ஆடல் நிகழ்த்தியும் விழாவை சிறப்பித்து நகர மக்களை மகிழ்வித்து வந்தாள். விழாக் காலங்களில் மாதவியினுடைய ஆடல் பாடல் நாட்டியம் நடங்களைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்த உள்ளூர் வெளியூர் மக்கள் எல்லோரும் அவளுடைய கலைத் திறமையை மெச்சிப் புகழ்ந்தார்கள். அவளுடைய கலைப் புகழ் சோழ நாட்டில் மட்டுமல்லாமல் பாண்டி நாட்டிலும் சேரநாட்டிலும் பரவிற்று. தமிழகத்துக்கு அப்பாலும் அவளுடைய புகழ் சென்றது. தமிழகத்துப் பேர்போன கலைச் செல்வியாக அக்காலத்தில் மாதவி விளங்கினாள்.

மாதவி பிறந்த கணிகையர் குலம் தலைமுறை தலைமுறையாக ஆடற்பாடற் கலைகளில் பேரும் புகழும் பெற்றிருந்தது. அவளுடைய குலத்தைப்பற்றி ஒரு கதையுங்கூட வழங்கி வந்தது. தேவலோகத்திலே இந்திரனுடைய சபையிலே ஆடல்பாடல் முதலிய கலைகளில் தேர்ந்த அரம்பையர் சிலர் இருந்தனராம். அந்த அரம்பையரில் ஒருத்தி மாதவி என்பவளாம். அந்த மாதவி ஒரு நாள் இந்திர சபையிலே நடினம் ஆடின போது அச்சபையிலிருந்த சயந்த குமரன் என்பவன் அவளுடைய அழகில் ஈடுபட்டானாம். அவளும் அவன் மேல் மனத்தைச் செலுத்தினாளாம். அதன் காரணமாக அவளுடைய ஆடல் பாடல்கள் முறைப்படி நிகழாமல் வழுவடைந்து சிறப்படையாமற் போயிற்றாம். இந்திர சபையிலிருந்த இசைக்கலை யாசிரியராகிய நாரதர் மாதவியின் ஆடல்பாடல்கள் வழுப்பட்டதன் காரணத்தையறிந்து மாதவிக்கும் சயந்த குமரனுக்கும் சாபங்கொடுத்தாராம். மாதவி விண்ணுலகத்தைவிட்டு மண்ணுலகத்திலே மானிடமகளாகப் பிறக்கக் கடவள் என்றும், சயந்த