உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

181

குமரன் மண்ணுலகத்தில் மலையிலே மூங்கிலாகப் பிறந்து பிறகு தலைக் கோலாகக் கடவன் என்றும் சாபங் கொடுத்தாராம். சாபம் பெற்ற மாதவி மண்ணுலகத்திலே காவிரிப்பூம்பட்டினத்திலே மானிட மகளாகப் பிறந்து ஆடல் பாடல் கலைகளைப் பயின்று வாழ்ந்தாளாம். அவளுடைய பரம்பரையிலே எத்தனையோ கூத்தியர்கள் தோன்றிக் கலைகளைப் பயின்று புகழ் படைத்திருந்தார் களாம். அந்த மாதவி பரம்பரையில் வந்தவள்தான் கோவலன் காலத்தி லிருந்த நமது மாதவி. இந்தச் செய்தியைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகின்றது:

‘நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும்

ஆயிரங் கண்ணேன் செவியகம் நிறைய

நாடகம் உருப்பசி நல்காள் ஆகி

மங்கல மிழப்ப வீணை மண்மிசைத்

தங்குக விவளெனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய

அங்கர வல்குல் ஆடலுங் காண்குதும்’

(சிலம்பு, கடலாடுகாதை: 18-25)

மற்றும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையின் முதல் ஏழு அடி களும் இச்செய்தியைக் கூறுகிறது. மணிமேகலை 24-ஆவது காதை 13, 14ஆம் அடிகளிலும் இந்த வரலாறு குறிப்பாகக் கூறப்படுகிறது.

பூம்புகார் நகரம் என்னும் காவிரிப்பூம்பட்டினத்திலே ஆண்டு தோறும் நிகழ்ந்த இந்திர விழா நாட்களிலே மாதவியின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன என்று கூறினோம். அக்கலை நிகழ்ச்சிகள் பரத நாட்டியமும் இசைப்பாட்டும் மட்டுந்தான் என்று கருதவேண்டா. இவற் றுடன் பதினொரு வகையான ஆடல்களையும் அவள் நிகழ்த்தினாள். கொடு கொட்டியாடல், பாண்டரங்கக் கூத்து, அல்லிய ஆடல், மல்லாடல், துடிக்கூத்து, குடைக் கூத்து, குடக்கூத்து, பேடியாடல், மரக் காலாடல், பாவையாடல், கடையக்கூத்து என்னும் பதினொரு ஆடல் களையும் அவள் ஆடினாள். (சிலம்பு, கடலாடு காதை: 39-63)

இந்தப் பதினொரு ஆடல்களையும் ஆடினபோது அந்தந்த ஆடல்களுக்குரிய பாத்திரங்களாகிய சிவபெருமான், கண்ணன், முருகன், காமன், கொற்றவை, திருமகள், அயிராணி (இஇந்திராணி) முதலியவர் களின் உருவத்தில் அவரவர்களின் ஆடையணிகளை