உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

183

வேகமாகப் பறந்துவந்து மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் சோழ நாட்டையடைந்தார்கள். பூம்புகார் நகரத்தில் இறங்கியபின் விஞ்சையன் அந்நகரத்திலிருந்த கோயில்களையும் பூஞ்சோலை களையும் தன் காதலிக்குக் காட்டினான். பிறகு மாதவியாடிய அரங்கத்துக்கு வந்து அவளுடைய ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தான்.

'சிமையத் திமையமும் செழுநீர்க் கங்கையும் உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும் வேங்கட மலையும் தாங்க விளையுள் காவிரி நாடுங் காட்டிப் பின்னர்ப்

பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்திச் சொல்லிய முறையில் தொழுதனன் காட்டி மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போன்'

'அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் நிலையும் படிதமும் நீங்கா மரபிற்

பதினோ ராடலும் பாட்டின் பகுதியும்

விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய் தாதவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய மாதவி மரபின் மாதவி இவள்' எனக் காதலிக் குரைத்துக் கண்டுமகிழ் வெய்திய மேதகு சிறப்பின் விஞ்சையன்’

என்று இந்தச் செய்தியைச் சிலப்பதிகாரத்தில் (கடலாடுகாதை : 28-71) இளங்கோ அடிகள் கூறுகிறார்.

இமயமலையின் வடசேடியில் வாழ்ந்த விஞ்சையன் ஒருவன் தன் காதலியுடன் புறப்பட்டு ஆகாய வழியே பறந்துவந்து காவிரிப்பூம் பட்டினத்தில் இறங்கி மாதவியின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந் தான் என்பது வெறுங் கற்பனைதான். இந்தக் கற்பனை, மாதவியின் கலைச் சிறப்பை விளக்குவதற்காகவே காவியப் புலவரால் கற்பிக்கப் பட்டது. காவிய நூல்களை அழகுபடுத்துவது கற்பனைகளே. காவிய நூல்களுக்குக் கற்பனைகளே பெரிதும் அணிசெய்கின்றன.

விஞ்சையன் என்னும் ஒரு பாத்திரத்தைக் கற்பனையாக அமைத்து அவள் இமய மலையிலிருந்து ஆகாயயவழியே பறந்துவந்து மாதவியின் ஆடல் பாடல்களைக் கண்டு மகிழ்ந்தான் என்று கூறுவதன் மூலம் மாதவியின் கலைச் சிறப்பை அறிவிக்கிறார் காவியப் புலவரான