உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

இளங்கோ வடிகள். இந்தக் கற்பனை சிலப்பதிகாரக் காவியத்தில் மிக அழகாக அமைந்திருக்கிறது. சுற்றுப்புற நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் திரள் திரளாக வந்து மாதவியின் ஆடல்பாடல்களைக் கண்டுங் கேட்டும் மகிழ்ந்தனர் என்று சொல்வதைவிட, வடசேடியிலிருந்து இசைக்கலை நாடகக் கலை களை யறிந்த ஒரு விஞ்சையனும் வந்து பார்த்து மகிழ்ந்தான் என்று கூறுவது மாதவியின் கலைச்சிறப்பைப் பன் மடங்கு உயர்ந்துகிறதன்றோ?

இவ்வாறு உலகப் புகழ்பெற்ற கலையரசியாகிய மாதவி காவிரிப் பூம்பட்டினத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆடல்பாடல் களை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். கலைரசிகனாகியகோவலனும் அவளுடன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு அதிகமாக வாழ்ந்து வந்தான். இவர்களுக்குப் பிறந்த மணிமேகலை என்னும் மகளும் இசைக்கலைகளையும் பரதநாட்டியம் முதலிய ஆடற்கலைகளையும் நன்றாகப் பயின்று பன்னிரண்டு வயதை யடைந்திருந்தாள்.

"

மாதவி, பதியிலாராகிய கணிகையர் குலத்தில் பிறந்தவள்தான். ஆனால், சிப்பிக்குள் முத்துப் பிறப்பது போலவும் சேற்றில் தாமரை மலர்வதுபோலவும் அவள் நற்குணமும் நல்லொழுக்கமும் உடையவளாக இருந்தாள். கணிகையருக்கு உரிய,

‘நறுந்தா துண்டு நயனில் காலை

வறும்பூத் துறக்கும் வண்டு’

இல்லை.

கோவலனைக்

போன்ற தன்மை ம அவளிடம் கணவனாகக் கொண்டு அவள் குலமகள் போலவே வாழ்ந்தாள்.

ஆனால், மாதவியிடம் ஒரே ஒரு குற்றம் இருந்தது. அது, எக்காலத்திலும் கணிகையருக்கும் நடிகைகளுக்கும் உள்ள படாடோப வாழ்க்கை. பூம்புகார் நகரம் நாகரிகம் படைத்த பட்டினம். மேற்கே ரோமாபுரி (யவனநாடு) முதலிய நாடுகளிலிருந்தும், கிழக்கே காழகம் (பர்மா), கடாரம், சாவகம் (ஜாவா, கமாத்திரா தீவுகள்) முதலிய நாடுகளி லிருந்தும் கடல் வழியாகக் கப்பல்களில் வந்து இறங்கிய பண்டங்கள் பூம்புகார்ப் பட்டினத்தைச் செல்வமும் நாகரிகமும் அடையச் செய்தன. நாகரிக நகரங்களில் படாடோப வாழ்க்கை இயற்கைதானே. பொது மக்களிடையே மாதவியிடம் இருந்த நன்மதிப்பும் பாராட்டும் அவளை மேலும் மேலும் படாடோப வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தது. அவளுடைய படாடோப வாழ்க்கை கோவலனுடைய பெருஞ்