உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

19

தொல்காப்பியம் சங்க நூல்களுக்கு முற்பட்டகாலத்தில் எழுதப்பட்ட தாதலால் அது கி.பி. 400க்குப் பிறகு எழுதப்பட்டிருக்கவேண்டும். ஹோரா என்னும் கிரேக்கச் சொல் தொல்காப்பியத்தில் ஓரை என்று கூறப்படுகிறது. கி.பி. 378 இல் இருந்த Paulus Alexandrinus என்பவர் எழுதிய கிரேக்க வான சாஸ்திர நூலில் இருந்து இந்தச் சொல்லைத் தொல்காப்பியர் பெற்றிருக்கவேண்டும். ஆகவே, தொல்காப்பியம் கி.பி. 400க்குப் பிறகு எழுதப்பட்ட நூல்." இதுதான் கே.ஜி. சங்கர் என்பவர் எழுதியிருப்பதன் சுருக்கம். (The Moriyars of the Sangam Works by K.G. Sankar. PP 664-667. Journal of the Royal Asiatic Society 1924)

1956 இல் வெளிவந்த “தமிழ்மொழி தமிழ் இலக்கியவரலாறு” என்னும் ஆங்கில நூலில் திரு. S.வையாபுரிப் பிள்ளை அவர்களும் தொல்காப்பிய நூலின் காலத்தைப்பற்றி ஆராய்கின்றார். சங்க நூல்களில் மௌரியர் என்னும் அரசர் கூறப்படுவதைக் குறிப்பிட்டு, இந்த மௌரியர் சரித்திரத்தில் கூறப்படும் மௌரியர் அல்லர் என்று ஐயம் கொள்கிறார். (பக்கம் 12.)

மேலும் வையாபுரிப் பிள்ளை கீழ்க்கண்டபடியும் எழுதியுள்ளார்: மனுதர்ம சாஸ்திரத்தில் கூறப்படுகிற சமுதாயத்தைப் பற்றிய சில செய்திகளைத் தொல்காப்பியர் தமது தொல்காப்பிய நூலில் எழுதி யிருக்கிறார். இதனால் தொல்காப்பியர் கி.பி.200-க்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கிறது. கௌடல்யர் தமது அர்த்த சாஸ்திரத்திலே எழுதியிருக்கிற 32 உத்திகளைத் தொல்காப்பியர் எடுத்துத் தொல் காப்பிய நூலில் எழுதியுள்ளார். வடமொழியில் உள்ள பரத நாட்டிய சாஸ்திரத்திலிருந்தும், வாத்சாயனரின் காமசூத்திரத்திலிருந்தும் சிலவற்றை எடுத்துக் கொண்டார். எட்டு மெய்ப்பாடுகளையும், தசா வஸ்தைகளையும் முக்கியமாகக் குறிப்பிடலாம். இவையெல்லாம், தொல்காப்பியம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்டது என்பதைக் காட்டுகின்றன. ஆகவே, தொல்காப்பியர் காலம் கி.பி. 5- ஆம் நூற்ாண்டு என்று சொல்லலாம். வச்சிர நந்தி நிறுவிய பேர்போன திராவிட சங்கம் கி.பி. 470 இல் நிறுவப்பட்டது என்பதும் இதற்குச் சாதகமாக இருக்கின்றது. இந்தத் தமிழ்ச் சங்கத்தில் எழுதப்பட்ட முதல் நூல் தொல்காப்பியமாக இருக்கலாம். தொல்காப்பியம் ஓரை என்னும் (வடமொழியில் ஹோரா) என்னும் கிரேக்கச் சொல்லைப் பயன் படுத்துகிறது. கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் வடமொழி யாளர் தாம் எழுதிய சோதிட சாஸ்திர நூல்களில், ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லைக் கடனாகப் பெற்றுக்கொண்டு எழுதினார்கள். வட