உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

மொழியாளர் உபயோகப்படுத்திய ஹோரா என்னும் சொல்லைத் தொல் காப்பியர் ஓரை என்று பயன்படுத்தியுள்ளார். எனவே, தொல்காப்பியம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். (பக்கம் 14).

மேலும் பிள்ளையவர்கள் எழுதியுள்ளார்:- “தொல்காப்பியர் காலம் விவாதத்திற்குரியது. ஆனால், தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளன (பக்கம் 65 - History of Tamil Language and Literature. by Prof. S. Vaiyapuri Pillai. 1956)

و,

வையாபுரிப்பிள்ளை இன்னொரு கட்டுரையில், தொல்காப்பியர் கி.மு.150க்குப் பிற்பட்டகாலத்தவர் என்று எழுதியுள்ளார். தொல்காப்பியர் பதஞ்சலியின் சூத்திரங்களைக் கையாளுகிறார் என்றும் ஆகவே பதஞ்சலியின் காலமாகிய கி.பி. 150-க்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் என்றும் எழுதுகிறார். (Tolkappiyar and Patanjali. by Rao Sahib S. Vaiyapuri Pillai. PP. 134-138. Dr. C. Kunhan Raja Presentation Volume. Madras - 1946)

மேலும் வையாபுரிப் பிள்ளை, தமது இலக்கிய தீபம் என்னும் நூலில் (பக்கம் 131-144), தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்பதை எழுதியுள்ளார்.

66

இனி, மு. இராகவையங்கார் அவர்கள்,

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் காரணம் என்ப

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்குப் பொருள் கூறியபோது, தமிழர்களுக்குக் கற்புத் தெரியாது என்றும், ஆரியப் பார்ப்பனர் வந்து, மணம்செய்துகொண்டு கற்புடன் வாழும் முறையைக் கற்றுக் கொடுத் தார்கள் என்றும் எழுதியிருக்கிறார். (தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. மு. இராகவையங்கார்.)

6

இந்த ஐயங்கார் எழுதிய இதே செய்தியை இன்னோர் ஐயரும் எழுதி யுள்ளார். பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் தாம் எழுதிய தொல் காப்பிய ஆங்கில உரையில் இதனை எழுதியிருக்கிறார். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே ஆரியப் பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்திருந் தனர் என்றும், அந்தப் பார்ப்பனர் கற்பு முறை தெரியயாத தமிழர் களுக்குக் கற்பு முறையைக் கற்றுக் கொடுத்தார்கள் என்றும் எழுதி யிருக்கிறார். (பக்கம் 92, Tolkappiyam. PorulAtikaram by P. S. Subramaniya Sastri. The Kuppuswami Sastri research Institute. Mylapore, Madras 1949).