உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

21

இவ்வாறு ஐயங்காரும் ஐயரும், ஆரியப் பார்ப்பனர் தமிழர்களுக்குக் கற்பு முறையைத் கற்றுக்கொடுத்தார்கள் என்று தொல்காப்பியர் கூறி யுள்ளதாக எழுதியுள்ளனர்.

இந்தச் சுப்பிரமணிய சாஸ்திரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத ஆசிரியர். இவர் 1946 ஆம் ஆண்டில், திருவாங் கூர்ப் பல்கலைக் கழகத்திலே, "தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள தொடர்புபற்றிய ஆராய்ச்சி” என்னும் தலைப்பில் சொற் பொழிவுகள் செய்தார். அச் சொற்பொழிவுகள் புத்தகமாக அச்சிடப் பட்டுள்ளன. அதில் தொல்காப்பியத்தைப் பற்றியும் தொல்காப்பியரைப் பற்றியும் கூறியுள்ளார். இதிலும், பார்ப்பனர் தமிழருக்குக் கற்பைக் கற்றுக் கொடுத்தனர் என்று எழுதியுள்ளார். அன்றியும், சமஸ்கிருத இலக் கணத்திலிருந்தும், தர்ம சாஸ்திரம், காமசூத்திரம், கௌடல்லியர் அர்த்த சாஸ்திரம் முதலிய வடமொழி நூல்களில் இருந்தும் சில கருத்துக் களைத் தொல்காப்பியர் எடுத்துத் தொல்காப்பியத்தில் எழுதியுள்ளார் என்று இவர் எழுதியுள்ளார். இந்நூலில் இவர் கூறியுள்ளவற்றை எழுதினால் இடம் பெருகும் என்று அவற்றை யெல்லாம் இங்கு எழுதவில்லை. வேண்டுவோர் அந்நூலில் காண்க. (An enquiry into the Relationship of Sanskrit and Tamil. by Vidyaratna P.S. Subramaniya Sastri. Travancore University Publications English No. 2. University of Travancore 1946. Price Rs.2-4-0)

66

இவ்வாறு தொல்காப்பியர் காலத்தைப் பற்றியும் தொல்காப்பிய நூலைப் பற்றியும் இவர்கள், யானைகண்ட பிறவிக் குருடரைப்போல, “ஆராய்ச்சி”களை எழுதியிருப்பதை அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார் களா? “பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே” என்பதற்கிணங்க, மெய்போலத் தோன்றுகின்ற இந்தப் பொய்யுரைகளை உண்மை என்று ஏற்றுக்கொள்வது அறிஞர் களுக்கு அழகாமோ? மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்குப் பரம உண்மை போலவும், அசைக்க முடியாத ஆராய்ச்சி போலவும் காணப் படுகிற இந்தப் பொய்க்கூற்றுக்களைக் பிட்டுப்பிட்டுக் காட்டி, அலசி அலசிக் காட்டி உண்மையை நிலைநாட்டவேண்டுவது கற்றறிந்தோர் கடமை யல்லவா? பாவாணர்களும் கவிவாணர்களும், வித்துவான்களும், புலவர் களும், டாக்டர்களும் புரொபசர்களும் இப்பொய்க் கூற்றுகளுக்குத் தக்க விடை எழுதி உலகத்துக்கு உண்மையைக் காட்டுவார்கள் என்று நம்புகிறோம்'

1. இதிற்காணும் மாறுபாடுகளைச் சான்றுகளுடன் விளக்கிக் கட்டுரையாசிரியர் தொடர்ந்தெழுதுவர். ஆசிரியர்.