உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

191

காலத்தினர் என்று கொள்ளுவது எத்தனை அசம்பாவிதம்! இவரைச் சங்கப் புலவர் அல்லரெனக் கொள்ளுதற்கு மேற்காட்டியன தக்க சான்றுகளாகும். இங்ஙனமாக, இளங்கோவடிகளும் கூலவாணிகன் சாத்தனாரும் பிற்பட்ட காலத்தவரே யாவர்”. (பக்கம் 136)

வையாபுரிப் பிள்ளை தாம் எழுதிய “தமிழ் மொழி - தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் ஆங்கில நூலிலும் இதே கருத்தை எழுதி யுள்ளார். (History of Tamil language and Literatrue - 1956)

"கோவலனும் கண்ணகியும் புத்தர் காலத்துக்குப் பல தலை முறைக்கு முன்னே இருந்தவர்கள் என்று மணிமேகலைக் காவியம் கூறுகிறது. (XXVIII 141-146) மதுரை நகரத்தை அழித்தனால் தனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்குக் கண்ணகி கோவலனுடன் இவ் வுலகத்தில் பல பிறப்புக்கள் பிறந்து கடைசிப் பிறப்பிலே புத்தருடைய தருமோபசேத்தைக் கேட்டு வீடுபேறடையப் போவதாகத் தெய்வ உருவ மடைந்த கண்ணகி மணிமேகலையிடம் கூறுகிறார். இதனால் கண்ணகியும் கோவலனும் சரித்திரத் தொடர்புடைய ஆட்கள் அல்லர்”.

"Kannagi as deity informs Manimekalai that to expiate her sin of destroying Madurai she and Kovalan would be undergoing births and deaths for generations together in this world and at long last they would hear the dharmic word from the mouth of Buddha himself and then they would get the final release. These statements clearly show that Kannagi and Kobalan are not historic figures." (page 146)

பிள்ளையவர்கள் கூறிய இதே செய்தியைத்தான் இவருடைய நண்பரான திரு. நீலகண்ட சாஸ்திரியும் கூறுகிறார். “சிலப்பதிகார மணி மேகலை காலம்” என்னும் ஆங்கிலக் கட்டுரையிலே சாஸ்திரியார்

கூறுவது வருமாறு:

"கபிலவாஸ்து நகரத்தில் புத்தர் உபதேசம் செய்யும்போது கோவலனும் கண்ணகியும் அவ்வுபதேசத்தைக் கேட்டு மோட்சம் அடைவார்கள் என்றும், தானும் அவ்வமயம் அங்கு இருப்பார் என்றும் கோவலனுடைய தந்தை மணிமேகலையிடத்தில் கூறியதாக மணி மேகலைக் காவியம் கூறுகிறது. இவ்வாறு கூறுவதனால் இக்காவியங் களின் ஆசிரியர்களும் காவியத் தலைவனும் காவியத் தலைவியும் சேரன் செங்குட்டுவனும் சரித்திர புருஷர்கள் என்றும் அவர்கள் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்றும் கனவுகூடக் காணமுடியுமா?