உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. மணிமேகலையில் முரண்பட்ட செய்தியா?*

6

மணிமேகலை என்னும் காவியத்திலே, அதன் ஆசிரியராகிய கூல வாணிகன் சாத்தனார், சரித்திர சம்பந்தமாக முரண்பட்ட செய்தியைக் கூறியுள்ளதாகத் திருவாளர்கள் S. வையாபுரிப் பிள்ளையும், K.A. நீலகண்ட சாஸ்திரியும் எழுதியிருக்கிறார்கள். கூலவாணிகன் சாத்தனார் சங்கப் புலவர், பௌத்த மதத்தவர், பௌத்த மத தத்துவங்களையும் பௌத்த சரித்திரத்தையும் நன்கு அறிந்தவர். இத்தகைய அறிஞர் தாம் இயற்றிய மணிமேகலை என்னும் காவியத்தில் முரணான செய்திகளைக் கூறுவாரா?

திரு. வையாபுரிப் பிள்ளையும், திரு. நீலகண்ட சாஸ்திரியும் சென்னைப் பல்கலைக் கழகத்திலே முறையே தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும், சரித்திர ஆராய்ச்சித்துறைத் தலைவராகவும் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்தவர்கள். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்கு ஆராய்ச்சித்துறையில் வழிகாட்டியவர்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். தமிழ் இலக்கிய ஆராய்ச்சியிலும் தமிழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சியிலும் ஒருவரை ஒருவர் பின்பற்றிச் செல்கிறவர்கள். இப்பெரியார்கள் கூறுகிறார்கள் - மணிமேகலையிலே சாத்தனார் முரண்பட்ட செய்திகளைச் கூறுகிறார் என்று. இவர்கள் கூறுவதுபோல, மணிமேகலைக் காவியத்தில் முரண்பட்ட செய்தி உண்டா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டுவது தமிழரின் கடமை அல்லவா? இதனை ஆராய்வோம்.

தமது “இலக்கிய மணிமாலை" என்னும் நூலிலே வையாபுரிப் பிள்ளை அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்:

"மேலும் கோவலனும் கண்ணகியும், புத்ததேவன் கபில வாஸ்துவில் அவதரித்துச் செய்யும் தருமோபதேசத்தைக் கேட்டு வீடு அடைவார்கள் என்று மாசாத்துவான் கூறியதாகச் சாத்தனார் மணி மேகலையில் (XCXVIII-141-146) எழுதினர். புத்தர் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்திலேயே கோவலன் முதலியோர் வாழ்ந்தன ரென்பது இவர் கொண்ட கதை. இது முன்பின் முரண். இச்சாத்தனார் இவர்களது * தமிழ்ப் பொழில். 35: 3, 1959.