உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. மலர்மிசை ஏகினான்*

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

என்னும் திருக்குறளில் ‘மலர்மிசை ஏகினான்' என்பது எந்தக் கடவுளைக் குறிக்கும் என ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இந்தக் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், இன்ன மதக் கடவுளைத் தான் இச்சொற்றொடரை குறிக்கும் என்பதைக் கூறாமல், பொதுவாக 'மலரின் கண்ணே சென்றவன்' என்று பொருள் கூறினார். கூறிய பின்னும், 'இதனைப் பூமேனடந்தான் என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கேற்றுவாருமுளர்' என்று விளக்குகின்றார். எனவே, அவர் காலத்திலேயே, மலர்மிசை ஏகினான் என்னும் சொற்றொடர், குறிப்பிட்ட மதக்கடவுளைக் குறிக்கிறதென்னும் வழக்கு இருந்து வருகிறதென்பது விளங்குகின்றது. பரிமேலழகர் குறிப்பிடுகி..... அந்த 'பிறிதொரு கடவுள்' யார்? அவர் தாம் சமணரின் அருகக் கடவுள். இது எவ்வாறு பொருந்தும்? மலர்மிசை ஏகினான் என்பது அருகக் கடவுளையன்றி ஏனைய மற்ற கடவுளர்க்கும் பொருந்தாதோ எனின், பொருந்தாத அருகக்கடவுளையே இச்சொற்றோடர் குறிக்கும். இதனை விளக்குவோம்.

பல்வேறு மதத்தவரும் தத்தம் கடவுளை வாழ்த்திப் போற்றும் பாக்களில் தத்தம் கடவுளது திருவடிகளை தாமரைப்பூவிற்கு உவமை கூறியிருக்கின்றனர். மலர்மிசை போன்றதிருவடி என்னும் பொருள்பட அவர்கள் யாவரும்கூறிச்சென்றனர். ஆனால், ஆருகத மதத்தவராகிய சமண சாக்கிய மதத்தாராகிய பௌத்தரும் தமது கடவுளின் திரு வடியைக் கூறும்போதெல்லாம் மலர்போன்ற திருவடி என்று கூறுவது மட்டுமன்றி மலர்மேல் நடந்த திருவடி என்றும் யாண்டும் கூறியிருக் கின்றனர். இக்கருத்தினைச் சமண பௌத்த சமய நூல்கள் எல்லா வற்றிலும் காணலாம். புத்தர் பிறந்தவுடனே ஏழடி நடந்தார் என்றும், பாதத்தைப் பூமியில் வைக்கும்போது ஒவ்வொரு தாமரைப் பாதத்தைத்

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) என்ற நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.