உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

203

தாங்கிக்கொண்டன என்றும் பௌத்த சமய நூல் கூறுகிறது. சமண ராகிய மணக்குடவர் இக்கருத்தைத் தழுவியே திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையில், மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப் பட்ட திருவடி என்று எழுதியிருக்கின்றார். இனி, சமண சமய நூல்கள், அருகக் கடவுள் மலர்மேல் நடந்த திருவடி உடையவன் என்று கூறி யிருப்பதை எடுத்துக்காட்டுவாம்.

முதலில் நிகண்டுகளைப் பார்ப்போம். சூடாமணி கண்டு அருகக் கடவுளைப் ‘பூமிசை நடந்தோன்' என்றும், மலவூர்தி என்றும் கூறு கின்றது. சேந்தன் திவாகரமும் முருகனைப் பூமிசை நடந்தோன் என்றே செப்புகின்றது. பிங்கல நிகண்டும் அவ்வாறே ‘பூமிசை நடந்தோன்’ எனக் கூறுவதோடு, 'அருகன் ஊர்தி அம்புயம்' என்று குறைகின்றது இதனால் சமணரின் அருகக் கடவுள் மலர் மிசை ஏகினவன் என்பது நன்கு விளங்குகின்றது.

கோவலனையும் கண்ணகியையும் உடன் கொண்டு மதுரைக்குச் சென்ற கௌந்தியடிகள் என்னும் ஜைன சமயமூதாட்டியார் அருகக் கடவுளைப் போற்றித் துதித்தபோது,

"மலர்மிசை நடந்த மலரடி யல்லதுஎன்

தலைமிசை யுச்சி தானணிப் பொறாஅது

என்று வாழ்த்திய தாக ஜைனராகிய இளங்கோ அடிகள் தாம் அருளிய சிலப்பதிகாரத்தில் (நாடுகாண் காதை) கூறுகின்றார். இதில் அருகக் கடவுள் மலர்மேல் நடந்த மலர் போன்ற திருவடிகளை யுடையவன் என்று கூறப்பட்டுள்ளது காண்க.

66

மற்றொரு ஜைன நூலாகிய சீவகசிந்தாமணியைப் பார்போம்:

“எங்கு முலகமிருள் நீங்க இருந்த எந்தை பெருமானார்

தங்கு செந்தா மரையடி என் தலையவே, என் தலையவே’

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் சைவராக இருந்தும், ஆருகத மதக்கொள்கையை நன்குணர்ந்தவராதலின், அந்த மரபைப் பின்பற்றி, எந்தையாகிய பெருமானாருடைய தாமரைமேற் றங்கினவடி என்று விளக்கியிருப்பது நோக்குக:

“மன்றனாறு மணிமுடிமேல் மலிந்தசூளா மணி போலும்

வென்றோர் பெருமான் அறவாழி வேந்தன் விரிபூந்தாமரைமேல்