உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

சென்ற திருவாரடி ஏத்தித் தெளிவும் பொருள்க ளோரைந்தும் அன்றி யாறும் ஒன்பானும் ஆகுமென்பா ரறவோரே.

99

(முத்தியிலம்பகம், நற்காட்சி 1,2 ஆம் செய்யுள்)

செந்தாமரைமேல் நடந்தானுக்கு (அருகக் கடவுளுக்கு) நந்தா விளக்குக்கென்றும் பூசனைகென்றும் நான்கு கோடி பொன்னையும், நூறு ஊர்களையும், தேர்களையும், யானைகளையும் சீவகன் வழங்கினான் என்று சிந்தாமணி (இலக்கணையார், 117) கூறுகின்றது:

66

'நந்தா விளக்குப் புறமாகென நான்கு கோடி

நொந்தார்க் கடந்தான் கொடுத்தான்பின்னை நூறு கந்தார்க் கடாத்த களிறுங்கொடித் தேர்கள் நூறு

செந்தா மரைமேல் நடந்தானடி சேர்த்தி னானே.

மற்றொரு செய்யுளிலும் சிந்தாமணி (முத்தியிலம்பகம், துறவு, 424) அருகக் கடவுள் பூமேல் நடந்தவன் என்பதைக் கூறுகின்றது:

66

'குண்டலமும் பொற்றொடும் பைந்தாரும் குளிர்முத்தும்

வண்டலம்பு மாலையு மணித்தொத்தும் நிலந்திவள விண்டலர்பூந் தாமரையின் விரைததும்ப மேனடந்த வண்டலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான்.'

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் என்னும் சைவர், விரைத்ததும்ப விரிந்த மலர்ந்த தாமரையின்மேல் நடந்தவடி' என்று உரை எழுதியிருப்பதையும் காண்க.

இன்சுவையும் கவிநயமும் ததும்பும் சூளாமணி என்னும் ஜைனக் காவியத்திலும் பல இடங்களில், அருகக் கடவுள் பூமேல் நடந்த திருவடிகளையுடையவன் என்று கூறப்படுகின்றார். அச்செய்யுள்க ளில் சிலவற்றைக் காட்டுவோம்:

66

"விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய் உரைமணந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை.

66

முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர் மேற்சென்றாய் யருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை.

"மணமயங்கு தாமரைமேல், வான்வணங்கச் சென்றாய் குணமயங்கி யாம் பரவக்கொண்டுவப்பா யல்லை