உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

“பண்டா கமத்துட் பயிலாவுரை

66

என்று மிக்கார்

விண்டீங் கிதனை வெகுளார்விடல்

வேண்டு வன்யான்

தண்டா மரைமேல் நடந்தான் தடந்தாள் வணங்கிக்

கண்டேன் கிடந்தேன் கனவின்னிது

கண்ட வாறே

99

அறநெறிச் சாரச் செய்யுளுள் ஒன்று இச் செய்தியையே கூறுகின்றது:

'தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்

பூவின்மேற் சென்றான் புகழடியை - நாவின் துதித்தீண்ட டறநெறிச் சாரத்தைத் தோன்ற

விரிப்பன் சுருக்காய் விரைந்து.

சமண சமயத்தவரால் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியில் கீழ்க்கண்ட செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இச் செய்யுள் களிலும் அருகக் கடவுள் பூவின்மேல் நடந்தவன் என்று கூறப் பட்டுள்ளது காண்க:

66

66

'காமரு கதிர்மதி முகத்தினை

சாமரை இடையிடை மகிழ்ந்தனை

தாமரை மலர்புரை அடியினை

தாமரை மலர்மிசை ஒதுங்கினை'

66

وو

"மாதவர் தாதையை, மலர்மிசை மகிழ்ந்தனை.

“ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி

வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி”

وو

இதுகாறும் ஜைனசமய நூல்களினின்று எடுத்துக்காட்டிய மேற் கோள்களினால் மலர்மிசை ஏகினான் என்று திருவள்ளுவர் கூறியது அருகக் கடவுளையே என்பது அங்கை நெல்லிக்கனி என விளங்கு கின்றது. ஜைன மதத்திலும் பௌத்த மதத்திலும் அல்லாமல் ஏனைய சமயங்களில் கடவுளைப் பூமேல் நடந்தவன் என்று கூறியிருப்பதாக நான் அறிந்தவரையில் காணப்படவில்லை. அவ்வாறு கூறப்பட்டிருப் பின், அன்புகூர்ந்து காட்டினால் வணக்கத்தோடு ஏற்றுக் கொள்ளப்படும்.