உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

207

தேவாரத்தில் எங்கேனும் சிவனுடைய பாதம், பூமேல் நடந்த பாதம் எனக் கூறப்பட்டுள்ளதா என்பதை அறிய.... அதனைத் துருவித் துருவி ஆராய்ந்தேன். ஒரே இடத்தில் அன்றி மற்றெல்லா இடங் களிலும் அவ்வாறு கூறப்படாததைக் கண்டேன். சிவனது திருவடி தாமரைமேல் நடந்த திருவடி என்று கூறப்பட்ட அந்த ஒரே இடமும் அப்பர் சுவாமிகள் கூறியது. அப்பர் சுவாமிகள் ஜைன மதத்தில் நெடு நாள் பழகி அந்த மதக்கொள்கைகளை நன்கு பயின்று தருமசேனர் என்னும் பெயருடன் ஜைனமதத்தலைவராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததொன்றே. அவர் சைவ சமயத்தை மேற்கொண்ட பிறகும் ஜைனமதக் கொள்கையாகிய மலர்மிசை ஏகினான் என்னும் கொள்கையைத் தமது தேவாரத்தில் ஓர் இடத்தில் கூறியுள்ளார். இதனை அறிந்து கூறினாரோ அல்லது பக்திப் பெருக்கினால் மறந்து கூறினாரோ தெரியவில்லை; அத்தேவாரச் செய்யுள் இது:

66

'தாளுடைச் செங்க மலத் தடங்கொள்சே வடியார் போலும் நாளுடைக் காலன்வீழ வுதைசெய்த நம்பர் போலும் கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனைமேய ஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட் டடிக ளாரே.

""

அப்பர் சுவாமிகள் ஜைனமதக் கொள்கைகள் சிலவற்றை எக் காரணத்தாலோ சில இடங்களில் சைவ சமயத்தில் ஏற்றித் தமது தேவாரத்தில் கூறியிருக்கின்றார்; ஜைனமதக் கொள்கைகளை நன்குணர்ந்தவர்கள் அப்பர் சுவாமிகளின் தேவாரத்தை ஊன்றிப் படிப்பார்களானால், இதனை நன்குணரக்கூடும். சிவபெருமான் தாமரை மேல் தங்கிய திருவடியுடையவன் என்று அப்பர் ஒரே ஓர் இடத்தில் மட்டும் கூறியிருக்கின்றார்; வேறு இடங்களில் கூறினார்களில்லை. சுந்தரரும் சம்பந்தரும் ஓரிடத்திலேனும் இவ்வாறு கூறவே இல்லை. ஜைனமதக் கொள்கையாகையால் அவர்கள் இதனைக் கூறாமல் விட்டனர்போலும்.

சிவபெருமான் 'தாளுடைச் செங்கமலத்தடங்கொள் சேவடியார்' என்று அப்பர் ஒரே ஓர் இடத்தில் கூறினார். அப்பர் சுவாமிகளே, 'திருவடித் தாண்டகம்' அருளியிருக்கிறார். அதில் சிவபெருமானது திருவடி களின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து போற்றியுள்ளார். ஆனால், அந்தத் திருவடித் தாண்டகத்தில், சிவபெருமான் மலர்மிசை ஏகின திருவடியுடையவர் என்பதைக் கூறாமலே விட்டுவிட்டார். சிவன் மலர்