உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

23

அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாக் கடுங்கோ னீறாக எண்பத்தொன்பதின்மர் என்ப அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந் தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம்.'

'இனி இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க்காப்பியனும், சிறுபாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக்கோனும், கீரந்தையு மென இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை யகவலுமென இத் தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூதபுராணமுமென இவை என்ப. அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்க மிருந்தார் என்ப. அவரைச் சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவி யரங்கேறினார் ஐவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழா ராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டி நாட்டைக் கடல் கொண்டது.

'இனிக் கடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவி யாரும் சேந்தம்பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங்குன்றூர்க் கிழாரும் இளந்திருமாறனும் மதுரை யாசிரியர் நல்லத்துவனாரும் மருதளிளநாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப் பட்டன நெடுந்தொகை நானூரும் குறுந்தொகை நானூரும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப் பியமும் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத் தொண்ணூற் றைம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கம் இரீஇ யினர் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருக்க முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெரு வழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப.'