உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இவ்வாறு கூறப்படுகிற செய்தியில் தலைச்சங்கம் 4440 ஆண்டு இருந்தது என்றும், இடைச்சங்கம் 3700 ஆண்டு இருந்தது என்றும், கடைச் சங்கம் 1850 ஆண்டு இருந்தது என்றும் கூறப்படுகிறது. நீண்ட கால எல்லை கூறப்படுவதனாலே மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன என்பதே புனைகதை என்று சிலர் கருதுகிறார்கள். இதனை ஆராய்வோம்.

திரு. ஸ்ரீனிவாச ஐயங்கார் தாம் எழுதிய ‘தமிழ் ஆய்வுரை' என்னும் நூலில்' இதுபற்றி இவ்வாறு எழுதுகிறார். "இதில் கூறப்படும் கால எல்லையை நம்பமுடியாதபடியால் இதுபுனை கதை.” என்று கூறி மறுக்கிறார். திரு எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் தாம் எழுதிய ‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாறு'2 என்னும் நூலிலே இதே காரணத்தைக் காட்டிச் சங்கம் என்பது கட்டுக் கதை என்று கூறுகிறார்.

"But the traditional view is that there existed three tamil sangams or Academies in which Tamil Literary works were 'heard' and assessed, the first academy lasting for 4440 years, the second for 3700 years and the third for 1850 years. Altogether these three Sangams lasted for 9990 years. Since scholars hold that the last phase of the third Sangam was coeval with the beginning of the Christian Era, the first Sangam, according to these tradition, must have come into existence about B.C. 10,000! This tradition, is recorded in Iraiyanar Ahapporul, a work perhaps of the 13th century. Gods also are said to have participated in the deliberations of the first Sangam! We may leave such fables alone and seek for historical truth elsewhere."

தலைச்சங்கத்தை நடத்திய பாண்டியர் 89 பேர் என்றும், அவர்கள் சங்கம் நடத்தியகாலம் 4440 ஆண்டு என்றும் கூறப்படுகின்றன. அதாவது அந்தப் பாண்டியர் ஒவ்வொருவரும் சராசரி ஏறக்குறைய 49 ஆண்டு அரசாண்டனர் என்பது தெரிகிறது.

இடைச் சங்கத்தை நடத்திய பாண்டியர் 59 பேர் என்றும், அவர்கள் 3700 ஆண்டு சங்கம் நடத்தினார்கள் என்றும் கூறப்படுகின்றனர். அதாவது ஒவ்வொரு பாண்டியனும் சராசரி ஏறக்குறைய 62 ஆண்டு அரசாண்டான் என்பது தெரிகிறது.

கடைச்சங்கத்தை நடத்திய பாண்டியர் 49 பேர் என்றும், அவர்கள் 1850 ஆண்டு சங்கம் நடத்தினார்கள் என்றும் கூறப்படுகின்றனர்.

1.

7 M. Srinivasa Aiyengar - Tamil Studies

2. (P. 10-11 History of Tamil language and literature. Prof. S. Vaiyapuri Pillai 1956)