உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பெயர்கள் கூறப்படுகின்றன. எட்டு அரசர் 2,41,200 ஆண்டு அரசாண் டார்கள் என்று கூறப்படுகிறது; அதாவது ஒவ்வொரு அரசனும் சராசரி 3150 ஆண்டு அரசாண்டான் என்று கூறப்படுகிறது! இதை எப்படி நம்புவது? அது போகட்டும். வெள்ளப்பிரளயத்துக்குப் பின் அரசாண்ட அரசர்களின் பட்டியல் கூட கிடைத்திருக்கின்றது. அதன்படி 23 அரசர்கள் 24510 ஆண்டு 3 மாதம் 31/2 நாட்கள் அரசாண்டார்களாம்! (French Excavation. Sumer and Akkad Kings' list. The first dynasty of Kish) இதன்படி ஒவ்வொரு அரசனும் சராசரி 1061/2 ஆண்டு அரசாண்டான் என்று தெரிகிறது.

கால்டிய நாட்டு இன்னொரு அரசர் பரம்பரைப் பட்டியலும் கிடைத்திருக்கிறது. அதில் 12 அரசர்கள் 2310 ஆண்டு அரசாண்டனர் என்று கூறப்படுகின்றனர். அதாவது, ஒவ்வொரு அரசனுடைய சராசரி ஆட்சி, ஆண்டு 1921/2 வருஷம். (The first dynasty of Erich. German Excavation at Warka.)

"

இந்தப் பட்டியலில் சில தெய்வங்களின் பெயர்கள் அரசர்களின் பெயருடன் கூறப்பட்டுள்ளன. மதுரையில் பாண்டியர் அமைந்த தலைச்சங்கத்திலே திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த முருகவேளும், நிதியின் கிழவனும் முதலிய தெய்வங்களின் பெயர்கள் கூறப்படுவதுபோல கால்டிய நாட்டு அரசர் பரம்பரைப் பட்டியலிலும் சூரியதேவனுடைய மகனாக மெஸ்-கி-அக்-க-ஸெ-யிர் என்னும் தெய்வத்தின் பெயர் கூறப்படுகிறது. மேலும் ஆட்டிடைய னாகிய லூகல்பண்ட என்னும் தெய்வத்தின் பெயரும், மீன்காரனாகிய தூமுஸி (Dumuzi) என்னும் தெய்வத்தின் பெயரும், கூறப்படுகின்றன.

இன்னொரு பட்டியலில் 4 அரசர்கள் 177 ஆண்டு அரசாண்ட செய்தி கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அரசனும் சராசரி 40 ஆண்டு அரசாண்டனர் என்று கூறப்படுகின்றனர். (The First dynasty of ur Excavation by Sir Leonard Woolly.)

முதலில் கூறப்பட்ட பட்டியலைச் சரித்திர ஆராய்ச்சிக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு அரசனும் சராசரி 3150 ஆண்டு அரசாண்டான் என்று கூறப்படுகிற காரணத்தினால். ஆனால், மற்றப் பட்டியலில் கூறப்படுகிற அரசர்களைச் சரித்திர காலத்து அரசர் என்று ஆராய்ச்சிக்காரர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிரஞ்சு அகழ்வாளர் (French Excavation) பட்டியலில் கூறப்படுகிற