உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

27

ஒவ்வொரு அரசனும் 1061/2 ஆண்டு வீதம் 23 அரசர்கள் 24510 ஆண்டு அரசாண்டனர் என்பதை சரித்திரக்காரர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஜெர்மனி அகழ்வாளர் (German Excavation) பட்டியலில் காணப்படுகிற, ஒவ்வொரு அரசனும் சராசரி 1921/2 ஆண்டு வீதம் 12 அரசர்கள் 2310 ஆண்டு ஆட்சிசெய்தனர் என்னும் பட்டியலையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சர் லியோனார்டு உல்லியின் “ஊர்” நகர அகழ்வாராய்ச்சிப் பட்டியலில் கூறப்படுகிற ஒவ்வொரு அரசனும் 44 ஆண்டு வீதம் 4 அரசர்கள் 177 ஆண்டு அரசாண்டனர் என்பதையும் சரித்திர ஆராய்ச்சிக்காரர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஒவ்வொருவரும் நெடுங்காலம் அரசாண்டனர் என்பதை ஒப்புக்கொள்ளாமல், அதில் கூறப்படுகிற அரசர்கள் உண்மையில் வாழ்ந்திருந்து அந்நாட்டை அரசாண்டனர் என்பதை மட்டும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

சுமேரிய நாட்டு அரசர் பட்டியலில் அரசர்கள் நெடுங்காலம் அரசாண்டதாகக் கூறப்படுகிறது. போலவே, தமிழ்ச் சங்கம் வைத்து நடத்திய பாண்டியர் ஒவ்வொருவரும் நெடுங்காலம் அரசாண்டனர் என்று கூறப்படுகிறது. ஆனால், சுமேரிய பட்டியலில் கால அளவு மிக அதிகமாகவும் பாண்டியர் பட்டியலில் கால அளவு சற்றுக் குறைவாகவும் கூறப்படுகிறது. ஆனால் இரண்டும், சாஸ்திரீய ஆராய்ச்சி முறைக்கு அதிகப்பட்ட காலத்தைக் கூறுகின்றன. சுமேரிய அரசரின் சராசரி ஆட்சி ஆண்டுகள் 1061/2, 1921/2, 44 என்றும், பாண்டிய மன்னரின் சராசரி ஆட்சி ஆண்டு 50, 62, 37 என்றும் அறியப்டுகின்றன. சுமேரிய அரசர்கள் சரித்திர புருஷர்கள் என்று மேல் நாட்டு வரலாற்றுப் பேராசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறபடியால், பாண்டிய அரசர்களும் சரித்திரகாலப் புருஷர்கள் என்று ஏற்றுக் கொள்ளப் படவேண்டியவர்களே.

தலைச் சங்கத்தின் பட்டியலில் சிவபெருமான், திருமால், முருகன், குபேரன் முதலிய தெய்வங்களின் பெயர்கள் கூறப்படுகிறபடியால் அந்தப் பட்டியலை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கக்கூடும். ஆனால், இடைச்சங்க, கடைச்சங்கத்துப் பட்டியலில் அவ்விதமாகத் தெய்வங் களின் பெயர் காணப்படாதபடியால் அவ்விரண்டு சங்கங்களையும் அச்சங்கங்களிலிருந்த பாண்டியர்களையும் சரித்திர புருஷர்கள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், அவற்றில் கூறப்பட்ட காலத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது இல்லை சுமேரிய அரசர் பட்டியலை