உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

ஏற்றுக்கொள்ளும்போது பாண்டிய அரசர் பட்டியலையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பாண்டியர் பட்டியலை ஏற்றுக்கொள்ளா விட்டால் சுமேரியப் பட்டியலையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆராய்ச்சி என்பது எல்லா நாட்டுக்கும் பொதுவானது. ஒரு நாட்டுக்கு ஒருமுறை, இன்னொரு நாட்டுக்கு வேறொரு முறை என்பது பொருந்தாது.

நான் சுமேரிய நாட்டு அரசர் பட்டியலையும் பாண்டியரின் முச்சங்கப் பட்டியலையும் ஒப்பிட்டுக் கூறுகிறதற்கு அடிப்படையான. சில காரணங்கள் உள்ளன. சுமேரியரும் திராவிடரும் ஒரு காலத்தில் ஒன்றாக ஒரே இடத்தில் வாழ்ந்தவர் என்று மேல்நாட்டுக் கீழ்நாட்டுச் சரித்திர அறிஞர்கள் கூறுகிறார்கள். திராவிடரும் சுமேரியரும் ஒரே இனத்தவர் என்று அவர்கள் எழுதியுள்ளார்கள். சுமேரியருக்கும் திராவிடருக்கும் (தமிழர்) முன் ஒரு காலத்தில் ஏதோ ஒருவகையில் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இதற்குச் சான்றாகச் சுமேரிய நாட்டின் பழைய ஊர்ப் பெயர்கள் உள்ளன. சுமேரிய நாட்டின் முக்கிய பட்டினத்துக்கு ஊர் என்று பெயர் இருந்தது. இன்னொரு நகரத்துக்கு எருதூர் என்று பெயர் இருந்தது. மற்றொரு ஊருக்கு நிப்பூர் என்று பெயர் இருந்தது. ஊர், எருதூர் நிப்பூர் என்னும் பெயர்களில் ஊர் என்னும் திராவிடப் பெயர் அமைந்திருப்பது காண்க. ஊர் என்னும் சொல்லுக்குத் தமிழில் என்ன பொருள் உண்டோ அதே பொருள்தான் சுமேரிய மொழியிலும் ஊர் என்னும் சொல்லின் பொருளாக இருந்தது.

மேலும் சுமேரிய மொழியில் அமர, பீடு, ஆள் முதலிய சொற்கள் திராவிட தமிழ்ச் சொற்களாகவே காணப்படுகின்றன. அமா என்னும் சுமேரிய வார்த்தைக்கு அம்மா என்பது பொருள். பீடு என்னும் சுமேரிய சொல்லுக்கு வீடு என்பது பொருள். ஆள் என்னும் சொல்லுக்கு ஓசை, யாழ் ஒலி, யாழ் என்னும் பொருள்கள் உள்ளன. ஆள் என்னும் சுமேரியச் சொல் தமிழில் யாழ் என்று கூறப்படுகிறது. தமிழரின் பழைய யாழ் வடிவம்போலவே சுமேரியரின் பழைய யாழ் வடிவமும் இருந்தது. பிற்காலத்தில் சுமேரிய யாழின் பத்தருக்கு முனபக்கத்தில் எருதுத் தலையில் உருவம் அமைக்கப்பட்டது. ஆனால் சுமேரிய, தமிழரின் இசைக் கருவிக்கு யாழ் (ஆள்) என்றே பெயர் இருந்தது கருதத்தக்கது.

இவ்வாறு திராவிடருக்கும் சுமேரியருக்கும் பழங்காலத்தில் தொடர்பு இருந்ததை யறிகிறோம். சுமேரிய அரசரின் பட்டியலிலும்