உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தொல்காப்பியர் காலம் வேங்கடம்

-

சிவராசபிள்ளையவர்கள், தொல்காப்பியப் பாயிரத்தில், தமிழகத் தின் வடவெல்லையாகக் கூறப்படுகிற வேங்கடத்தை ஆதாரமாகக் கொண்டு தொல்காப்பியர் காலத்தை ஆராய்கிறார்.'

அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘பழந்தமிழரசரின் கால அட்டவணை' என்னும் நூலிலே இதுபற்றி எழுவதன் சுருக்கம் இது:

'சோழ அரசரின் ஆறாவது பரம்பரையில் வந்த கரிகாற்சோழன் (இரண்டாமவன்) அருவா நாட்டை வென்றான். அவனுடைய தந்தை, பாட்டன் காலத்தில் வேங்கடமலை சோழநாட்டின் எல்லையாக அமையவில்லை. கரிகாலன் இரண்டாமவன் காலத்தில் சோழநாட்டின் வடக்கு எல்லை வேங்கடம் வரையில் இருந்தது. இந்த வேங்கடமலை எல்லை, தொல்காப்பியரின் காலத்தைத் துணிந்து கூறுவதற்கு உதவியாக இருக்கிறது. தொல்காப்பியருடன் கல்வி பயின்ற பனம் பாரனார், தாம் இயற்றிய தொல்காப்பியப் பாயிர உரையில் வேங்கட மலையைத் தமிழ் நாட்டின் வட எல்லை என்று கூறுகிறார்.

ஆகவே, சோழர் ஆட்சி வேங்கட எல்லை வரையில் பரவு வதற்கு முன்பு தொல்காப்பியர் தமது இலக்கண நூைைல எழுதியிருக்க முடியாது என்று நியாயமாகத் தீர்மானிக்கலாம். புல்லி என்பவன் தலைமையில் கொள்ளைக் கூட்டத்தார் வாழ்ந்திருந்த காலத்தில் வேங்கட மலைப் பிரதேசத்தில் சோழரின் நாகரிக ஆட்சி இருந்திருக்க முடியாது. அருவாநாடு, அருவா வடதலை நாடுகளைச் சோழன் வென்று தமிழரை அங்குக் குடியேற்றிய பிறகுதான் வேங்கடம் சோழரின் வட எல்லை யாகவும் தமிழகத்தின் வட எல்லையாகவும் இருந்ததாகக் கருத வேண்டும்.’

அன்றியும் சிவராசபிள்ளை, தொல்காப்பியம் புறநானூற்றுக்குப் பின்னால் எழுதப்பட்ட நூல் என்றும் கூறுகிறார். (பக்கம் 259)

(The Chronology of the Early Tamil. by K. N. Sivaraja Pillai, University of Madras, 1932)....