உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

வெஞ்சரங்கோத் தெய்து விறலழிக்கு நன்மகனே பஞ்சவரிற் பார்த்த னுடன்மலைந்தா லஞ்சுதலை நாக மிருகாற் றொடாதொழிக வென்றுரைத்தாள் ஆக முறத்தழுவி யாங்கு.

அன்றியும்,

வம்பவிழ்தார் மன்னா! மணிநெடுந்தேர் மேலேறி யும்பியரைக் கொண்டுநீ நில்லாயே - லம்பொன்று இருகாற் றொடாயாக வேண்டுவனா னென்றாள் செருகாற் றடங்கண்ணா டேர்ந்து.

அன்றியும்,

என்மக்க ளைவர்க்கு மூத்தாய்! எழிலுறையு மினொக்கும் பைம்பூண் விறல்வீரா! வன்மைக்கண் வெந்திறன்மா நாக மிரண்டாவ தெய்யாதி;

இந்தவரம் வேண்டுவனா னின்று.

அசுவ சேன

னென்னும் மகா நாகம் யுத்த பூமியில் அருச்சுனன்மேல் இரண்டாவது எச்சிற் கணையாகத் தொடா தொழிவாயாக என்று வேண்டிக்கொள்ளக் கேட்டு வியாகுல மெய்திப் பின்னும் யாது சொன்னான் கன்னன்.

நந்திக் கலம்பகம்

நந்திக்கலம்பகம் செய்யுளிலக்கியம் மட்டும் அல்லாமல் சரித்திர ஆராய்ச்சிக்குரிய குறிப்புகள் அதில் காணப்படுகிற படியால், அந்நூல் முழுவதையும் இந்நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதனை அங்குக் காண்க.

சுந்தரர் தேவாரம்

சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவராத்திலிருந்து சில பாடல்கள், மாதிரிக்காகத் தரப்படுகின்றன.

மத்தயானை ஏறிமன்னர் சூழ வருவீர்காள்

செத்தபோதில் ஆருமில்லைச் சிந்தையுள் வைம்மின்கள் வைத்தஉள்ளம் மாற்றவேண்டா வம்மின் மனத்தீரே

அத்தர்கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.

1