உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

அன்னையே என்னேன் அத்தனே என்னேன்

அடிகளே அமையுமென் றிருந்தேன் என்னையும் ஒருவனுளன் என்று கருதி

இறை இறை திருவருள் காட்டாய்

அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்

சிராமத் துறை யடிகள்

பின்னையே யடியார்க் கருள்செய்வதாகில்

இவரலா தில்லையோ பிரானார்.

313

2

நீளநினைந் தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன்

வாளனகண் மடவாள் அவள் வாடி வருந்தாமே

கோளிலி எம்பெருமான்! குண்டையூர்சிலநெல்லுப் பெற்றேன்

ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே.

3

தம்மையேபுகழ்ந் திச்சை பேசினும்

சார்விலுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை

புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மையேதரும் சோறுங் கூறையும்

ஏத்தலாம் இடம் கெடலுமாம்

அம்மையே சிவலோக மாள்வதற் கியாது மையுற வில்லையே.

குற்றொருவரைக் கூறை கொண்டு

கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே மற்றொரு வரைப் பற்றிலேன் மறவாதெழு மட நெஞ்சமே

புற்றரா வுடைப்பெற்ற மேறி

புறம்புயந் தொழப் போதுமே.

மாற்றமேல் ஒன்றுரையீர் வாளா நீரிருந்தீர்

வாழ்விப்பனென ஆண்டீர் வழியடியேன் உமக்கு

ஆற்றவே திருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர்

அணியாரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில்

4

5