உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க

பண்பால் யாழ்வல்ல பாண பத்திரன்

தன்போ லென்பா லன்பன் றன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்

மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

பொன்வண்ணத் தந்தாதி

பொன்வண்ணத் தந்தாதியிலிருந்து சில செய்யுட்களைக்

காட்டுவோம்.

"பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணம்

மேனி பொலிந்திலங்கும்

மின்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணம்

வீழ்சடை வெள்ளிக்குன்றம்

தன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண

மால்விடை தன்னைக்கண்ட

என்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண

மாகிய வீசனுக்கே.

பல்உயிர் பாகம் உடல்தலை

தோல்பகலோன்மறல் பெண்

வில்லியோர் வேதியன் வேழம்

நிரையே பறித்துதைத்துப்

புல்லியுஞ் சுட்டும் அறுத்தும்

உரித்துக் கொண்டான் புகழே

சொல்லியும் பாடியும் மேத்தக்

கெடும் நங்கள் சூழ்துயரே.

சொல்லாதன கொழு நாவல்ல சோதியுட் சோதிதன் பேர்

செல்லாச் செவிமரந் தேறித்

தொழாத கை மண்டிணிந்த

கல்லாம் நினையா மனம்வணங்

காத்தலையும் பொறையாம்

1

2