உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

அல்லா வவயவந் தானும்

மனிதர்க் கசேதனமே.

தனக்குன்றம் மாவையஞ் சங்கரன்

தன்னரு ளன்றிப் பெற்றால்

மனக்கென்று நஞ்சிற் கடையா

நினைவன், மதுவிரியும் புனக்கொன்றை யானரு ளாற்புழு

வாகிப் பிறந்திடினும்

எக் கென்றும் வானவர்பொன்னுலகோ டொக்க வெண்ணுவனே.

கூறுமி னீசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின் கண்கள் தேறுமின் சித்தந் தெளிமின்

சிவனைச் செறுமின் செற்றம் ஆறுமின் வேட்கை யறுமின்

அவல மிவை நெறியா ஏறுமின் வானத் திருமின்

விருந்தா விமைய வர்க்கே.

ஆவன யாரே யழிக்கவல்லார்

அமையா வுலகில்

போவன யாரே பொதியகிற்பார்

புரமூன் றெரித்த

தேவனைத் தில்லைச் சிவனைத்

திருந்தடி கைதொழுது

தீவினை யேனிழந்தேன் கலை

யோடு செறிவளையே.

மாயனன் மாமணி கண்டன்

வளர்சடை யாற்கடிமை

ஆயின தொண்டர் துறக்கம்

பெறுவது சொல்லுடைத்தே

317

3

4

5

6