உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

வெண்பா

மனமாலுறாதே மற்றென் செய்யும் வாய்ந்த

கனமால் விடையுடையோன் கண்டத்து - இனமாகிக்

319

தோன்றினகார் தோன்றிலதேர்22 சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்23 கான்றனநீர் ஏந்திழையாள் கண்

இச்செய்யுள், கார்கண்டிரங்கல் என்னும் துறை; தோழிக்கூற்று.

கலித்துறை

கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டமென இருண்ட 24விண்ணார் உருமொடு மேலதுகீழது 25கொண்டல்விண்ட மண்ணார் மலைமே லிமையிலாலும் மானனைய

26

பெண்ணா மிவள்இனி என்னாக்கழியும் பிரிந்துறைவே.

ஆதியுலா

திருக்கயிலாய ஞானஉலா என்னும் ஆதியுலாவையும் சேரமான் பெருமாள் நாயனார் இயற்றினார். அதன் ஒரு பகுதியை மாதிரிக்காகக் காட்டுவோம்.

66

கலிவெண்பா

"திருமாலு நான்முகனுந் தேர்ந்துணரா தன்றங்கு அருமாலுற அழலாய் நின்ற - பெருமான்

பிறவாதே தோன்றினான் காணதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால் ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான்

ஊழால் உயராதே ஓங்கினான்

-

சூழொளிநூல்

ஓதாதுணர்ந்தான் நுணுகாது நுண்ணியான் யாதும் அணுகாது அணுகியான் - ஆதி அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்

அரனாய் அழிப்பவனுந் தானே

-

பரனாய

தேவரறியாத தோற்றத்தான் தேவரைத்தான்

மேவியவாறே விதித் தமைத்தான் ஓவாதே

எவ்வுருவில் யாரொருவர் உள்குவா ருள்ளத்துள்

அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும்