உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்

ஏனோர்க்குங் காண்பரிய எம்பெருமான் - ஆனாத சீரார் சிவலோகந் தன்னுட் சிவபுரத்தில்

ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப

-

ஆராய்ந்து

செங்கணமரர் புறங்கடைச் சென்றீண்டி

எம்பெருமான் எங்கட்கு அருளென்ன - அங்கொருநாள்.

திருவாசகம்

மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்திலிருந்து சில செய்யுள் களைக் காட்டுகிறோம்.

66

“நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க!

66

66

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க! ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க! ஏகன் அநகேன் இறைவன் அடிவாழ்க! வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க!

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க! கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க! சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க!”27

'காதார் குழைஆடப் பைம்பூண் கலன்ஆடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தம் ஆமாபாடி

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்'

"தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேனுண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத்தேன் சொரியும் குனிப் புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ”29