உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

345

பதமும் மாவிரதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. காபாலிகமும் வைரவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. திருநாவுக்கரசர் தமது திருவாரூர்ப் பதிகத்தில்,

அருமணித் தடம்பூண்முலை யரம்பையோ டருளிப்பாடி

உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்

விரிசடை விரதிகள் அந்தணர் சைவர்பாசுபதர் கபாலிகள் தெருவினிற் பொலியும் திருவாரூர் அம்மானே.

என்று இந்தச் சமயங்களைக் கூறுகிறார். திருஞான சம்பந்தரும் தமது திருச்சண்பைநகர் தேவாரத்தில்,

66

காதலால், சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே.

என்று பாசுபத மதத்தாரைக் கூறுகிறார். திருநாவுக்கரசரால் சைவனான மகேந்திரவர்மன், தான் எழுதிய மத்தவிலாசம் என்னும் நாடகத்தில், காஞ்சிபுரத்து ஏகாம்பரேசுவரர் கோயிலும் அதனை அடுத்திருந்த மயானத்திலும் கபாலிகரும் பாசுபதரும் இருந்தனர் என்று கூறுகிறான்.

மானக்கஞ்சாற நாயனார் புராணத்தில் மகாவிரதியரைப் பற்றியும், சிறுத்தொண்ட நாயனார் புராணத்தில் வைரவரைப் பற்றியும் சேக்கிழார் கூறுகிறார்.

மாவிரதியர் என்றும் மகாவிரதியர் என்றும் கூறப்படுகிறவரைப் பற்றி ஆராய்வோம். இந்தப் பிரிவினரோடு தொடர்புடையவர் பாசுபதர். இவர்கள் பசுபதியை வணங்குகிறவர்கள். இவ்விருவருக்குள் பெரிய வேறுபாடு இல்லை. சில சமயங்களில் இருவரும் ஒருவராகவே கூறப் படுகின்றனர். இந்தப் பாசுபதராகிய மாவிரதிகள், சுடுகாட்டில் வசிப்பவர். சுடுகாட்டுச் சாம்பலை உடம்பில் பூசி, இறந்தவர் எலும்பையும் தலை யோட்டையும் மாலையாகக் கழுத்திலும் தலையிலும் அணிந்து கொண்டு, தலை மயிரினால் செய்த பஞ்சவடி என்னும் பெயருடைய பூணூலை மார்பில் அணிந்து கொண்டிருப்பார்கள் என்று அப்பர் சுவாமிகள் தேவாரத்தினால் அறிகிறோம்.

66

'முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப்பின்னே