உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

வித்தகக் கோல வெண்டலைமாலை விரதிகள்

அத்தனாரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

(திருவாரூர் திருவாதிரைப் பதிகம். 1)

'சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு

தலையோடு மயிர்க் கயிறு தரித்தான் தன்னைப்

பவந்தாங்கு பாசுபத வேடத்தானைப்

பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்

கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை.

(திருவீழிமிழலை திருத்தாண்டகம்.)

99

"பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பினானை.

(திருக்கஞ்சனூர், 5)

இந்தப் பாசுபத மாவிரதக் கோலத்தைச் சிவபெருமானே பூண்டிருந்தார் என்றும், அது விலையில்லாத வேடம் என்றும் அப்பர் கூறுகிறார்.

66

"தலையினாற் றரித்த வென்புந் தலைமயிர் வடமும் பூண்ட விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.

(திருவிழிமிழலை........)

பெரிய புராணத்தில், மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றில், மாவிரதியர் வேடம் இவ்வாறே கூறப்படுகிறது. சிவபெருமான் மாவிரதி வேடங் கொண்டு நாயனாரிடம் வந்துஅவருடைய மகளின் கூந்தலைத் தமது பஞ்சவடிப் பூணூலுக்காகக் கேட்டார் என்றும், நாயனாரும் அதற் கிசைந்து மகளின் கூந்தலை அரிந்து கொடுத்தார் என்றும் கூறுகிறது. தலையிலே எலும்புமணி மாலையும், காதுகளிலே எலும்பினால் செய்த குண்டலங்களும், கபத்திலே எலும்பைக் கோத்தமைத்த தாழ்வடமும், மார்பிலே மயிரினால் செய்யப்பட்ட பஞ்சவடிப் பூணூலும், தோளிலே பட்டிகையில் அணிந்து திருநீற்றுப் பொக்கணத்துடன் மாவிரத மூர்த்தி எழுந்தருளினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

66

'முண்டநிறை நெற்றியின்மேல் முண்டித்த திருமுடியில்

கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி