உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

பண்டொருவன் உடல்அங்கம் பரித்தநாள் அதுகடைந்த வெண்டரளம் எனக்காதின் மிசை அசையுங் குண்டலமும்.

'அவ்வென்பின் ஒளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்வடமும் பைவன்பேர் அரவொழியத் தோளில்இடும் பட்டிகையும்

மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்மனச்

செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும்.

347

இவ்வாறு மாவிரத முனிவர் வரக்கண்டு, மானக்கஞ்சாறா எதிர்சென்று வணங்கி, மணப்பெண் கோலங் கொண்டிருந்த தம் மகளை அழைத்து அவரை வணங்கச் செய்தார். அப்போது அப் பெண்மணியின் கரிய கூந்தலைக் கண்ட மாவிரதியார் அக் கூந்தலைத் தமக்குத் தரும்படி அடியாரைக் கேட்டார்.

66

'தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன் மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தல் புறம் நோக்கி அஞ்சலிமெய்த் தொண்டரைப் பார்த்தணங்கிவள் தன் மயிர்

நமக்குப்

பஞ்சவடிக் காம்என்றார் பாவஅடித் தலங்கொடுப்பார்.

அப்போது அடியவர்,

66

“இருள்செய்த கருங்கூந்தல் அடியில் அரிந் தெதிர்நின்ற

மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட.

திருநாவுக்கரசர் பாசுபதரைத் “தலையறுத்த பாசுபதர்,”

'தலையறுத்த மாவிரதியர்” என்று கூறுகிறார்.

66

'முறைமையால் ஐம்பொறியும் வழுவா வண்ணம்

படித்தான் தலையறுத்த பாசுபதன்காண், பராய்த்துறை யான் காண்.'

(திருக்காளத்தி திருத்தாண்டகம். 2)

66

'தாட்பரவு கமலமலர் தயங்கு வானைத்

தலையறுத்த மாவிரதந் தரித்தான் றன்னை.

99

(திருக்கீழ்வேளூர். 4)