உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இனி, வைரவராகிய காபாலிகரைப்பற்றி ஆராய்வோம். காபாலிகருக்குக் காளமுகர் எனும் பெயருமுண்டு. இதை,

“விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை

தரித்ததோர் கோல கால பயிரவ னாகி.

என்று திருச் சேறைப் பதிகத்தில் திருநாவுக்ரசர் கூறுகிறார். வைரவ வேடத்தைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது : “படர்ந்த தலை மயிரைக் கொந்தளமாகப் பரப்பி, காதுகளில் தோடு அணிந்து, அக்கு மணியால் ஆன சன்னவீரம், ஆரம், தாழ்வடம் இவைகளை யணிந்து, கையிலே காபலபாத்திரமும் சூலமும் ஏந்திக் காபாலிகர் திரிவார்கள். இவர்களுக்கு முக்கிய அங்கம் தலையோடு. தலையோட்டிலே பிச்சை ஏற்று அதிலே உண்பார்கள். மது பானத்தையும் தலையோட்டிலே ஊற்றிக் குடிப்பார்கள். இவர்கள் நர மாமிசமும் உண்பார்கள் என்று பெரிய புராணம் கூறுகிறது.

"பெரிய பயிர வக்கோலப் பிரானார் அருளிச் செய்வார் 'யாம், பரியுந் தொண்டீர்! மூவிருது கழித்தால் பசுவீழ்த் திட வுண்பது.

என்றும்,

99

"பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் ‘நண்பு மிக்கீர், நாம்உண்ணப் படுக்கம் பசுவும்நரபசுவாம். என்றும் வைரவர் சிறுத்தொண்டரிடம் கூறியதாகப் பெரிய புராணம் கூறுவது காண்க.

பவபூதி என்பவர் எழுதிய மாலதீமாதவம் என்னும் வடமொழி நூலில், மாலதீ என்பவளைக் காபாலிகன் ஒருவன் சாமுண்டிக்குப் பலியிட முயன்றதைக் கூறுகிறது.

காபாலிகர் பைரவமூர்த்தியை வழிபடுவர். காபாலி கரைப்பற்றி, மத்தவிலாசப் பிரகசனத்தில் மகேந்திரவர்மன் அழகாகக் கூறுவதை அந் நாடகத்தில் காணலாம்.

இந்த அகப்புறச் சமயங்கள் நான்கும் வடஇந்தியாவில் தோன்றியன. லகுலீ என்பவர், சிவபெருமானின் அவதாரமாகத் தோன்றிப் பாசுபத மதத்தை உண்டாக்கினார் என்பர். ஆகவே இதற்கு லகுலீ பாசுபதம் என்றும் பெயர் வழங்குகிறது. லகுலீ என்றால் தண்டு அல்லது தடியை